»   »  உத்தம வில்லன் நஷ்டத்தைச் சரிகட்ட லிங்குசாமிக்கு கை கொடுக்கும் கமல் ஹாஸன்!

உத்தம வில்லன் நஷ்டத்தைச் சரிகட்ட லிங்குசாமிக்கு கை கொடுக்கும் கமல் ஹாஸன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு தயாரிப்பாளராக லிங்குசாமியின் வளர்ச்சியைப் பார்த்து கடந்த ஆண்டு வியந்தவர்களைவிட, பொறாமைப்பட்டவர்களே அதிகம்.

ஆனால் அவர்களின் வாய்க்கு அவல் மாதிரி அமைந்தது அஞ்சான் தோல்வி. அதிலிருந்து நிச்சயம் மீண்டு விடுவார் லிங்கு என்று அவரது நலம் விரும்பிகள் பலரும் எதிர்ப்பார்த்த நேரத்தில் இடியாய் இறங்கியது உத்தம வில்லன்.

Lingusamy to release Kamal's Thoongavanam

அந்தப் படத்தை வெளியிடுவதற்குள் லிங்குசாமியின் விழி பிதுங்கிவிட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்போது, குறைந்த செலவில் ஒரு படம் பண்ணித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார் கமல் ஹாஸன்.

இன்னொரு பக்கம் உத்தம வில்லன் பெரும் பாராட்டுக்களைப் பெற்றும், அதற்கான வசூலைக் குவிக்காமல் போனதால் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவைச் சந்தித்தார் லிங்கு.

இப்போது லிங்குசாமி தயாரிப்பில் உருவாகியுள்ள சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல், சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. இரண்டு படங்களுக்குமே நல்ல மவுத் டாக்கை ஏற்படுத்தியுள்ளன. இது லிங்குசாமிக்கு தெம்பைத் தந்துள்ளது.

இந்த நிலையில் கமலும் தன் பங்குக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளார். குறைந்த செலவில் தான் பண்ணித் தருவதாக வாக்குறுதி அளித்த படம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது தான் நடித்து வரும் தூங்கா வனம் படத்தின் வெளியீட்டு உரிமையை உங்களுக்கே தருகிறேன் என்று கூறி இன்ப அதிர்ச்சி தந்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘தூங்காவனம்' படத்தில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும், கிஷோர், பிரகாஷ் ராஜ், சம்பத், யூகி சேது உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்துக்குள் இதன் படப்பிடிப்பு முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources says that Kamal Hassan has decided to give the distribution rights of his Thoongavanam movie to Lingusamy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil