அஞ்சான் தோல்விக்கு இதுதான் காரணம்.. 14 வருஷமாகிடுச்சு.. பெருமூச்சு விடும் இயக்குநர் லிங்குசாமி!

சென்னை: விஜய்க்கு தெறி படம் ஹிட்டானது போல சூர்யாவுக்கு அஞ்சான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியிருக்க வேண்டியது. ஆனால், துரதிஷ்டவசமாக அஞ்சான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அந்த படம் ஃபிளாப் ஆனதை விட பீஸ்ட் படம் அளவுக்கு அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படமாக அப்போதே மாறியதுதான் இயக்குநரை வெகுவாக பாதித்தது.

மம்மூட்டி நடிப்பில் வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன.

Lingusamy reveals how Anjaan turned into flop in a recent interview


ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கிய பல படங்கள் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில், பல வருடங்களாக புதிய படங்கள் எதையும் இயக்காமல் உள்ளார்.

ஹாலிவுட் இயக்குநர்கள்: வெளிநாடுகளில் இயக்குநர்கள் வயதாக வயதாக பெரிய புதிய படங்களை இயக்கி வருகின்றனர். ஆனால் நம்ம ஊரில் ஒரு சில படங்களை இயக்கிய பின்னர் இயக்குநர்களுக்கு சரக்கு தீர்ந்து போய் விடுகிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மார்டின் ஸ்கார்சஸி, ஜேம்ஸ் கேமரூன் எல்லாம் இன்னமும் தரமான படங்களை கொடுத்து வரும் நிலையில், புதிய இயக்குநர்களை மட்டுமே நம்ம ஊரில் நம்பி வருகின்றனர். ஹரி, லிங்குசாமி, கே.எஸ். ரவிக்குமார், சேரன் போன்ற படங்கள் பெரிதாக முன்னணி நடிகர்களை வைத்து படங்களை பண்ண முடியாமல் உள்ளனர்.

அஞ்சான் தோல்விக்கு காரணம்: லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த வெளியான அஞ்சான் திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் அஞ்சான் படத்தின் ட்ரோல்கள் குவியக் காரணம் அந்தப் படத்தை ஒரு குறுகிய காலகட்டத்தில் எடுத்து முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதுதான் என்றும் ஏவிஎம் டப்பிங் தியேட்டரில் இருந்து தியேட்டருக்கு செல்லும் கேப் தான் ஒரு படம் வெற்றியடைவதும் தோல்வியடைவதும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஒரு சில விஷயங்களை செய்திருந்தால் அஞ்சான் சிறப்பாக வந்திருக்கும் என்றார்.

ரீ எடிட்: அஞ்சான் படத்தில் சில தேவையில்லாத காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை மீண்டும் ரீ எடிட் செய்து விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்போவதாக லிங்குசாமி அறிவித்துள்ளார். சூர்யா, சமந்தா நடிப்பில் வெளியான அந்த படம் யுவன் சங்கர் ராஜா இசையில் அத்தனை நல்ல பாடல்களையும் கொண்டிருந்தது. ஆனால் ஒரு சில இடங்களில் ஏற்பட்ட தவறுதான் அந்த படம் தோல்வி அடைய காரணம் என லிங்குசாமி கூறியுள்ளார்.

பையா ரீ ரிலீஸ்: லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான பையா திரைப்படம் சாதாரண கதை தான். ஆனால் அந்த படத்தை சிலர் 60 முறைக்கு மேல் பார்த்ததாக என்னிடமே கூறியுள்ளனர். பொதுவா ஒரு படம் பிடித்து விட்டால் ஒரு ஐந்து முறை அல்லது 10 முறைக்கு மேல் நானே பார்க்க மாட்டேன். 60 முறை ரசிகர்களை பார்க்க வைத்திருந்தால் அந்த படத்தில் ஏதோ மேஜிக் உள்ளது என்றுதான் அர்த்தம். வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி பையா திரைப்ப்டம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் விரைவில் அஞ்சான், ரன் உள்ளிட்ட படங்களையும் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக லிங்குசாமி கூறியுள்ளார். கடைசியாக அவர் இயக்கிய வாரியார் திரைப்படமும் ஓடாத நிலையில், அடுத்ததாக புதிய படங்களை இயக்குவதற்கு பயமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X