லிங்குசாமி படத்தோட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு... கைக்கொடுக்குமா தி வாரியர்?
சென்னை : தமிழில் சிறப்பான படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தி வாரியர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளார் லிங்குசாமி. ஆனந்தம் படத்தின்மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார். ரசிகர்கள் மத்தியில் சிறப்பான இயக்குநராக லிங்குசாமி இருக்கிறார்.

வெற்றியின் கட்டாயம்
இந்நிலையில் இவரது இயக்கத்தில் வெளியான அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் இவருக்கு கைக்கொடுக்காத நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தி வாரியர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை வெற்றிப் படமாக்க வேண்டிய கட்டாயத்தில் லிங்குசாமி உள்ளார்.

ஹீரோவாக ராம் பொத்தினேனி
இந்தப் படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகராக உள்ள ராம் பொத்தினேனி காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாகியுள்ளார் கீர்த்தி ஷெட்டி. படத்தில் மிரட்டலான வில்லனாக ஆதி நடித்து வருகிறார். மேலும் படத்தில் அக்ஷரா கௌரா,ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஜூலை 14ல் ரிலீஸ்
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 14ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரன்2 படத்தை இயக்கும் லிங்குசாமி?
தி வாரியர் படம் மிகவும் பிரம்மாண்டமான வகையில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி ரன்2 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான ரன் படம் லிங்குசாமியின் இயக்கத்தில் வெளியான மிகச்சிறந்த வெற்றிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











