மாஸா என்ட்ரி கொடுக்கும் ‘தி வாரியர்‘… எப்போ ரிலீஸ் தெரியுமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !
சென்னை : லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள தி வாரியர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி உள்ள இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

தி வாரியர்
விஷால் நடித்த சண்டக்கோழி 2 படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் தி வாரியர் படத்தில், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக க்ர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ராம் பொத்தினேனி
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள தி வாரியர் படத்தில், இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழ் இயக்குனருடன் இணைந்துள்ளார். இதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதிரடி ஆக்ஷன்
தி வாரியர் திரைப்படத்தில் ராம் பொத்தினேனி மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் வழக்கமான போலீஸ் கதை அம்சத்தைக் கொண்ட திரைப்படமாக இல்லாமல், பார்வையாளர்கள் ரசிக்கும் படி அதிரடி காட்சிகள் நிறைந்த சுவாரசியமான திரைப்படமாக இருக்கும் என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் ஜூலை 14 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி பவன் குமார் இப்படத்தை தயாரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











