#RAP019 படப்பிடிப்பு எப்போது!? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
சென்னை: தொடர் தோல்வி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த லிங்குசாமி தற்போது மீண்டும் இயக்க முன் வந்துள்ளார்.
தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து லிங்குசாமி தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.
ஆக்ஷன் படமாக தயாராகவுள்ள இந்தப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

நல்ல வரவேற்பு
தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகரான ராம் பொத்தினேனி கடைசியாக தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். தடம் படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை போல தெலுங்கிலும் கிடைத்தது. அதை தொடர்ந்து லிங்குசாமி உடன் இணைந்துள்ளார் ராம் பொத்தினெனி.

பழைய டிராக்
லிங்குசாமி பழைய டிராக்குக்கு திரும்ப இந்த படம் திருப்புமுனையாக இருக்கும் என தெரிகிறது. எனவே ராம் பொத்தினெனியை வைத்து லிங்குசாமி இயக்கவுள்ள இந்தப்படம் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. க்ரித்தி ஷெட்டியும் இந்த படத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள்
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக முடங்கி கிடந்த படப்பிடிப்பு பணிகள் தற்போது மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன. சூழ்நிலை எப்போது வேண்டுமானாலும் மோசம் அடையலாம் என்பதால் படக்குழுவினர்கள் வேகமாக பணியாற்றி வருகின்றனர்.

படக்குழு அறிவிப்பு
ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் முன்னர் தெரிவித்த நிலையில் #RAP019 படக்குழு படப்பிடிப்பு பணிகளை வரும் ஜூலை 12ம் தேதி தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது


Click it and Unblock the Notifications











