லிங்குசாமி இயக்கத்துல வில்லனாகறாங்க மாதவன், அருண் விஜய்... பேச்சுவார்த்தை கோயிங் ஆன்!
சென்னை : இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் அடுத்ததாக தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராம் பொத்தினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டி லீட் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கும் இந்த படத்தின் சூட்டிங் மே மாதத்திலேயே துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா உள்ளிட்ட காரணங்களால் சூட்டிங் தள்ளிப் போயுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கில் படம்
இயக்குநர் லிங்குசாமி டைரக்ஷனில் அடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ள படத்தில் ராம் பொத்தினேனி நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் எடுக்கப்பட உள்ளது. இதன் படப்பிடிப்பு மே மாதத்தில் துவங்கவுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதத்திலேயே லிங்குசாமி அறிவித்திருந்தார்.

விரைவில் சூட்டிங்
தற்போது கோவிட் லாக்டவுன் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ள நிலையில், படத்தில் உப்பேனா புகழ் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. லாக்டவுனில் தளர்வுகள் ஏற்படும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதவன், அருண் விஜய்யிடம் பேச்சு
இதனிடையே, படத்தில் வில்லன்களாக நடிக்க நடிகர்கள் மாதவன் மற்றும் அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. லிங்குசாமி இருவருக்கும் கதை மற்றும் அவர்களது கேரக்டர்களை விளக்கியுள்ளதாகவும் ஆனால் இருவரும் இன்னும் ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தேவிஸ்ரீ பிரசாத் இசை
இது லிங்குசாமியின் முதல் தெலுங்கு படம். இதேபோல ராம் மற்றும் கீர்த்திக்கும் முதல் தமிழ் படம். படத்தின் மியூசிக்கை தேவிஸ்ரீ பிரசாத் அமைக்கவுள்ள நிலையில் லிங்குசாமியுடன் அவர் இணையும் முதல் படம் இது. இதை அவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டர் மூலம் உற்சாகத்துடன் வெளிப்படுத்தியிருந்தார்.

அதிரடி அருண் விஜய்
மாதவன் இறுதியாக நடித்து வெளிவந்த மாறா படம் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இதேபோல மொழிமாற்று படமான சார்லியும் அவருக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது. இதனிடையே, அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாபியா படமும் சிறந்த விமர்சனங்களை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











