அப்பா வயது ஹீரோவுடன் கள்ளக்காதலா?: நடிகை விளக்கம்

By Siva

Recommended Video

நடிகர் நட்டி நட்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | அப்பா வயது ஹீரோவுடன் கள்ளக்காதலா?- வீடியோ

மும்பை: ஆமீர் கானுடன் காதல் என்று பேசப்படுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார் பாத்திமா சனா ஷேக்.

தங்கல் படத்தில் ஆமீர் கானின் மூத்த மகள் கீதாவாக நடித்து பிரபலமானவர் பாத்திமா சனா ஷேக். அந்த படத்திற்கு பிறகு ஆமீர் கானுடன் சேர்ந்து தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்திலும் நடித்தார் அவர்.

ஆமீர் கானின் பரிந்துரையின்பேரில் தான் பாத்திமாவுக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது என்று கூறப்பட்டது.

பிரச்சனை

பிரச்சனை

பாத்திமா சனா ஷேக்கிற்கும், ஆமீர் கானுக்கும் இடையே கள்ளக்காதல் என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த கள்ளக்காதலால் ஆமீர் கானுக்கும், அவரின் மனைவி கிரண் ராவுக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது என்று செய்திகள் வெளியாகின. இதை எல்லாம் ஆமீர் கண்டுகொள்ளவில்லை.

ஆமீர்

ஆமீர்

பாத்திமாவின் விஷயத்தில் ஆமீர் அதிக அக்கறை காட்டுவதாகவும், அவருக்கு பட வாய்ப்புகள் வாங்கித் தருவதாகவும் பேச்சு கிளம்பியது. நாளுக்கு நாள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதாகவும் பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட இருவரும் கேட்டும் கேட்காதது போன்று இருந்தனர்.

விளக்கம்

விளக்கம்

ஆமீர் கானுடனான காதல் பேச்சு குறித்து பேட்டி ஒன்றில் பாத்திமாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, மக்கள் எதையாவது கூறிக் கொண்டே தான் இருப்பார்கள். அதனால் இந்த விவகாரம் குறித்து நான் எதுவும் விளக்கம் அளிக்கப் போவது இல்லை. நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டார்.

கத்ரீனா

கத்ரீனா

தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்தில் ஆமீரின் பரிந்துரையால் பாத்திமாவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்ததை பார்த்து கத்ரீனா கைஃப் கடுப்பானாராம். அவருக்கு கவர்ச்சி கதபாத்திரம் கொடுக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X