முத்த காட்சிக்கு 50 முறை ரீ டேக் எடுத்த நடிகர்...நொந்து போன நடிகை!
சென்னை : முத்தக்காட்சிக்காக 50 முறை நடிகர் ரீ டேக் எடுத்ததால் அந்த நடிகை நொந்து நூடூஸாகி உள்ளார்.
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் முத்தக்காட்சிகள் என்பது ஏதாவது ஒரு படத்தில் தான் இருக்கும், அதுவும் முகம் தெரியாத யாரோ ஒரு நடிகை அந்த காட்சியில் நடித்து இருப்பார்.
பிரபலமான கதாநாயகி முத்தக்காட்சியில் நடித்து விட்டால், அவ்வளவு தான், அந்த படம் பேசுபொருளாகி விடும்.

வேறென்ன வேண்டும்
நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் வேறென்ன வேண்டும். இப்படத்தை சிவபார்வதி குமரன் இயக்கி உள்ளார். நரேன்ராம் தேஜ், பெரானா கண்ணா, பிக் பாஸ் தர்ஷன், அனுபமா, சுப்பிரமணி, ஆதித்யா போன்ற புதுமுகங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் நன்மை, தீமை
இன்றைக்கு காலகட்டத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. எந்த அளவுக்கு சோஷியல் மீடியாவின் வளர்ச்சி அபரிமிதமாகி உள்ளதோ அந்த அளவுக்கு குற்றச்சம்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமூக வலைதளங்களின் நன்மை தீமைகளை சொல்லும் படம் தான் வேறென்ன வேண்டும்.

முத்தக்காட்சி
இந்நிலையில், இத்திரைப்படத்தின் இயக்குநர் சிவபார்வதி குமரன் தன்படத்தில் உள்ள லிப் லாக் காட்சி குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், இப்படத்தின் கதைக்காக ஒரு முத்தக்காட்சி அவசியமாக இருந்தால், புதுமுக நடிகை பெரானா கண்ணாவிடம் இதுகுறித்து பேசினார். இந்த காட்சியில் முதலில் நடிக்க தயங்கிய அவர் பின், அந்த கதைக்கு அந்த காட்சி தேவை என்பதை உணர்ந்து நடிக்க சம்மதம் என்றார்.

50 முறை ரீ டேக்
ஆனால், அந்த முத்தக்காட்சியை படமாக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அதாவது நடிகர் நடிகை இருவருமேக புதுமுகம் என்பதால் தயங்கித், தயங்கி நடித்தனர். அது ஒழுங்காக வராத காரணத்தால் 50 முறை ரீ டேக்குகள் எடுத்து இந்த முத்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியில் நடிக்க தயங்கிய நடிகை பெரானா கண்ணா நொந்துவிட்டார். 50 டேக்குகளுக்கு மேல் சென்றதால் இனிமேல் அவர் நடிப்பாரா என்ற சந்தேகமே எனக்கு வந்து விட்டது என இயக்குநர்பேட்டியில் கூறியுள்ளார்.

ரசிகர்களுக்காக
இத்திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதால், வேறென்ன வேண்டும் படம் குறித்த ஆவலை தூண்டும் வகையில், லிப் லாக் காட்சி குறித்து தற்போது இயக்குநர் வாய்திறந்து இருக்கிறார். ஏராளமான புதுமுகங்களை கொண்ட இந்த படத்தில் பிக் பாஸ் தர்ஷன் இந்த வில்லாக நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











