ஜிம், யோகா, டயட்டு எல்லாம் ஓகோ ஆனால் மது அருந்துவது தப்பாச்சே மயிலு?
Recommended Video

சென்னை: உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்திய நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து இறந்திருக்கிறார்.
துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தது தடயவியல் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த தகவல் அறிந்து அவரின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஜிம்
யோகா, தினமும் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, நீச்சல், டென்னிஸ் என்று உடல் நலனில் அதிக கவனம் செலுத்தியவர் ஸ்ரீதேவி. ஃபிரை செய்த உணவு வகைகளை சாப்பிடவே மாட்டார்.

ஸ்ரீதேவி
உணவுக் கட்டுப்பாடு, யோகா என்று இருந்த ஸ்ரீதேவி மது அருந்தும் பழக்கம் உடையவர். மது உயிரைக் குடிக்கும் என்று தெரிந்தும் அதை மட்டும் அவர் விடவில்லை.

அதிருப்தி
ஸ்ரீதேவி மதுபோதையில் இறந்த செய்தி அவரின் ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. அவர் மூக்கு முட்ட மது குடித்திருக்க வேண்டும். அதனால் தான் அவரால் குளியல் தொட்டியில் இருந்து வெளியே வர முடியவில்லை என்று கூறப்படுகிறது.

குளியல் தொட்டி
குளியல் தொட்டி ஒன்றும் பெரிய ஆழமானது கிடையாது. தவறி விழுந்தாலும் எழுந்து வந்துவிடலாம். எழக் கூட முடியாத அளவுக்கு ஸ்ரீதேவி மது அருந்தியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. போதையில் எழ முடியாமல் உயிருக்கு போராடி இறந்திருக்கிறார். ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடையவில்லை.


Click it and Unblock the Notifications











