நயன், லட்சுமி ராய், சுருதி... ஐபிஎல்லுக்கு குருநாத் கூட்டி வந்த தமிழ் நடிகைகள்!

By Shankar

சென்னை: ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள ஏவிஎம் குடும்பத்தைச் சேர்ந்த குருநாத் மெய்யப்பன் மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடிகைகளை அழைத்து வந்தது, இரவு விருந்துகளில் வீரர்களுடன் நடிகைகளைப் பழக விட்டது, மேட்ச் நடக்கும் போது நடிகைகள் மைதானத்துக்குள் வர பணம் கொடுத்தது என பல விஷயங்களுக்கு இவர்தான் பிள்ளையார் சுழி போட்டவர் என்கிறார்கள்.

நயன்தாரா

நயன்தாரா

ஐபிஎல் ஆரம்பித்த புதிதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார் நடிகர் விஜய். அவருடன் சேர்த்து நயன்தாராவையும் விளம்பர தூதராக்கினார் குருநாத் (விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தைத் தயாரித்தது இந்த குருநாத் கட்டுப்பாட்டில் உள்ள ஏவிஎம்தான்).

ஆனால் குருநாத்துக்கும் நயன்தாராவுக்கும் ஒரு விருந்தில் மோதல் ஏற்பட்டதால், நயன்தாராவைக் கழற்றிவிட்டனர். அந்த இடத்துக்கு த்ரிஷாவைக் கொண்டு வர முயன்றார் குருநாத். ஒன்றிரண்டு பார்ட்டிகளிலும் த்ரிஷாவை கலந்து கொள்ள வைத்தார்.

லட்சுமிராய்

லட்சுமிராய்

முன்னணி நடிகை லட்சுமி ராயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அறிமுகப்படுத்தியதும் இந்த குருநாத்தான். கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத விளம்பர தூதர் மாதிரி ஆரம்ப காலத்தில் செயல்பட்டார் லட்சுமி ராய். தொடர்ந்து சென்னை அணியின் ஐபிஎல் போட்டிகளில் இவரைப் பார்க்க முடிந்தது. சென்னை அணித் தலைவர் டோனிக்கும் லட்சுமி ராய்க்கும் தொடர்பு என்றெல்லாம் செய்திகள் ரெக்கை கட்டிப் பறந்தன.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

சென்னை அணிக்கு விசில் போடுங்க என்று சொல்லிக் கொண்டு இப்போது வந்திருப்பவர் ஸ்ருதி ஹாஸன். இவரையும் குருநாத்தான் கூட்டி வந்தாராம். இவருக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் நெருக்கமான தொடர்பு உருவாக குருநாத் காரணமாக இருந்ததாக கிசுகிசுக்கிறார்கள்.

மேலும் சில நடிகைகள்...

மேலும் சில நடிகைகள்...

இவர்களைத் தவிர சோனியா அகர்வால் போன்ற சில நடிகைகளும் சென்னை அணி வீரர்களுடன் பழகி வந்துள்ளனர். இதுகுறித்த விசாரணை தீவிரமடையும்போது பல அதிர்ச்சிகரமான உண்மை வெளிவரும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X