கல்கி, பொய், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தமவில்லன்... நடிப்பிலும் அசத்திய கே.பி.!

சென்னை: காலத்தால் அழியாத திரைக் காவியங்கள் பலவற்றைத் தந்த பாலசந்தர், சில படங்களில் தனது நடிப்புத் திறமையையும் நிரூபித்துள்ளார்.

இயக்குநர் சிகரம் என அனைவராலும் அழைக்கப்பட்ட கே.பாலசந்தர் நேற்று காலமானார். அவருக்கு வயது 84. அன்னாரது உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. தலைவர்கள் மற்றும் கலைஞர்கள் பாலசந்தரின் மறைவுக்கு தங்களது இரங்கல்களை நேரிலும், சமூகவலைதளங்களிலும் தெரிவித்து வருகின்றனர்.

இவரது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் சுமார் 101 படங்கள் வெளிவந்துள்ளன. 1965ம் ஆண்டு நீர்க்குமிழி படம் மூலம் தனது இயக்குநர் பயணத்தைத் தொடங்கிய பாலசந்தர், கடைசியாக இயக்கிய படம் பொய்.

இயக்குநராக மற்ற நடிகர், நடிகைகளை இயக்கியது மட்டுமின்றி, தானும் சில தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் சினிமாவிலும் நடித்துள்ளார்.

நடிகராக...

நடிகராக...

கல்கி, பொய், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தம வில்லன் போன்ற படங்கள் பாலசந்தரை நடிகராக ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்தியது.

இயக்குநராகவே...

இயக்குநராகவே...

கல்கி படத்தில் மருத்துவமனைக் காட்சி ஒன்றில் இயக்குநராகவே நடித்திருப்பார் கே.பாலசந்தர். இதே போல், உத்தமவில்லன் படத்திலும் அவர் இயக்குநராகவே நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ரெட்டைச்சுழி...

ரெட்டைச்சுழி...

இவற்றிற்கு மாறாக ரெட்டைச்சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் இணைந்து முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் பாலசந்தர். படம் முழுவதும் வரும் இவரது கதாபாத்திரம்.

தாத்தா...

தாத்தா...

ரெட்டைச்சுழி படத்தில் குழந்தைகளின் தாத்தாவாக இவரும் பாரதிராஜாவும் நடித்திருந்தது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X