கோடிக்கணக்கில் நஷ்டம்.. வருட கணக்காக ரிலீஸாகாமல் இருக்கும் 5 படங்கள்!

சென்னை: கோடிக்கணக்கில் பணத்தை போட்டு படத்தை எடுத்துவிட்டு படம் எப்போது வெளியாகும் என்று தெரியாமல், பல படங்கள் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன.

அதில், நடித்த நடிகர், நடிகைகளே, படத்தின் பெயரை மறந்து போகும் அளவிற்கு வருட கணக்கில் படம் வெளியாகாமலே இருக்கும் படங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

துருவ நட்சத்திரம்: விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் 7 ஆண்டுக்கு மேலாக பண பிரச்சினை காரணமாக வெளியாகவில்லை. பல கட்ட முயற்சிக்கு பிறகு நவம்பர் 24 ந் தேதி துருவநட்சத்திரம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவால் படம் வெளியாகவில்லை. தற்போது 2023 டிசம்பர் 8ல் இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் சென்னையில் பெய்து வரும் மழை மற்றும் இயற்கை சீற்றம் காரணமாக இப்படம் இந்த வாரம் வெளியாகுமா என்பது சந்தேகம்.

List of 5 unreleased Tamil movies in years

பார்ட்டி: வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ள 'பார்ட்டி' திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. நீண்ட நாட்களாக வெளியாமல் இருக்கும் இப்படம் OTTயில் வெளியாகும் என செய்திகள் சமீபத்தில் வெளியானது. ஆனால் அது வெறும் வதந்தி என வெங்கட்பிரபு அறிவித்து இருந்தார். பார்ட்டி படம் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

List of 5 unreleased Tamil movies in years

இடம் பொருள் ஏவல்: கிராமத்து கதை அம்சம் உள்ள திரைப்படங்களை இயக்கி வரும் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள காதல் மற்றும் அதிரடி கலந்த திரைப்படம் இடம் பொருள் ஏவல். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தினை லிங்குசாமி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரச்சனை தீர்ந்துள்ள நிலையில் படம் விரைவில் வெளியாக உள்ளது.

List of 5 unreleased Tamil movies in years

நரகாசூரன்: கௌதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்த படம் நரகாசூரன். இப்படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் கிஷன், ஆத்மிகா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை, இயக்குநர் தயாரிப்பாளர் மோதல் என பல சிக்கல்களை கடந்துள்ள இப்படம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை.

List of 5 unreleased Tamil movies in years

சர்வர் சுந்தரம்: கே பாலச்சந்தர் இயக்கி நாகேஷ் அவர்கள் நடித்த சர்வர் சுந்தரம் படத்தின் தலைப்பை மட்டுமே எடுத்துக்கொண்டு நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள சர்வர் சுந்தரம் பல நாட்கள் ஆகியும் வெளியாகவில்லை. படத்தின் இயக்குநர் ஆனந்த் பால்கி இந்த படம் எப்போது வந்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று பொருமையோடு காத்துக்கொண்டு இருக்கிறார். இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X