Kollywood actors : நடிகராக இருந்து தயாரிப்பாளராக மாறிய நடிகர்கள்... இதற்கு காரணம் என்ன தெரியுமா?

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பிரபல நடிகர்கள் பலர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி இதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் வெறும் நடிகராக மட்டுமே இருந்தால் மட்டுமே வெற்றிப்பெற முடியாது, ஒன்றிரண்டு தோல்விப்படங்களை கொடுத்துவிட்டால் நாம் ஓரம்கட்டப்படுவோம் என்பதை புரிந்து கொண்ட நடிகர்கள் அதை சரிகட்ட படங்களை தயாரிக்க தொடங்கிவிட்டனர்.

அப்படி நடிகர்களால் இருந்து இன்று தயாரிப்பாளர்களாக வலம் வரும் பிரபலங்கள் யார் யார் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்

நடிகர், அரசியல்வாதி, இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பல திறமைகளைக் கொண்ட கமல்ஹாசனுக்கு கடந்த ஆண்டு ஒரு நல்ல ஆண்டா அமைந்தது. விக்ரம் என்று மாஸ் ஹிட்படத்தை கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களை உலகநாயகன் தன் வசம் வளைத்துப்போட்டுவிட்டார். ராஜபார்வை, விக்ரம், சத்ய படங்களை தயாரித்து தயாரிப்பாளராக மாறிய கமல் தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் சிம்புவின் 48வது படத்தையும், சிவ கார்த்திகேயனை வைத்து ஒரு படத்தையும் தயாரிக்க உள்ளார்.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்டரி கொடுத்து இன்று தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருக்கிறார். விக்ரம் படத்தில் இவர் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. சூரரைப்போற்று படத்திற்கு தேசியவிருதை பெற்ற நடிகராக மட்டுமில்லாமல் 2டி என்டர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் ஜோதிகா நடித்த 36 வயதினிலே,பசங்க 2, கடைகுட்டி சிங்கம், 24, சூரரைப்போற்று, பொன்மகள் வந்தாள் என ஏராளமான படங்களை தயாரித்துள்ளார்.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

அண்ணன் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக மாறிய தனுஷ், இன்று கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். ஆடுகளம், அசுரன் படத்திற்கு தேசிய விருது பெற்ற தனுஷ், வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் த்ரி, சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கா முட்டை, மாரி போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

நடிகர் விஷால்

நடிகர் விஷால்

செல்லமே,சண்டைக்கோழி, தீராத விளையாட்டுப்பிள்ளை போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த விஷால் விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார். பாண்டியநாடு என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளராக மாறிய விஷால் தொடர்ந்து நான் சிவப்பு மனிதன்,பூஜை, ஆம்பள, வீரமே வாகை சூடு போன்ற படத்தை தயாரித்துள்ளார். மேலும், துப்பறிவாளன்2 படத்தையும் தயாரிக்க உள்ளார். இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன், அயலான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மேலும் ராஜ்கமல் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் கமிட்டாகி உள்ளார். இத்திரைப்படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க உள்ளார். நடிகராக இருந்த சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தை சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் மூலம் தயாரித்து தயாரிப்பாளரானார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X