“தளபதி 66“ படத்தில் இணைந்த பிரபலங்கள்…முழு லிஸ்ட் இதோ !

சென்னை : விஜய்யின் 'தளபதி 66' திரைப்படத்தில் நடிக்க உள்ள முக்கிய நடிகர், நடிகை குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் , பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

தளபதி 66

தளபதி 66

நடிகர் விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, தில் ராஜூ தயாரிக்கிறார். தற்காலிகமாக இப்படத்திற்கு ‘தளபதி 66' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் நிறைவடைந்தது.

ராஷ்மிகா

ராஷ்மிகா

இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக, பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அதேபோல் இந்தப் படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிகர் ஷாம் நடிக்கிறார். சீனியர் நடிகரான சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குடும்ப பின்னணி படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

முழு லிஸ்ட்

முழு லிஸ்ட்

நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தளபதி 66 திரைப்படத்தல் இணைந்துள்ளதை உறுதி செய்திருந்தார். மேலும், நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகர் ஷாம், நடிகை சங்கீதா, நடிகை ஜெயசுதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றம் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா ஆகியோர் தளபதி 66 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

Recommended Video

Beast | Vijayயின் தந்தை S.A.Chandrasekarரின் Open talk | அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
பொங்கலுக்கு ரிலீஸ்

பொங்கலுக்கு ரிலீஸ்

பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது தளபதி 66 படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நிலையில், இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X