நடிகர் கிங்காங்கின் நல்ல மனசு... மகள் கீர்த்தனா திருமணத்தில் இத்தனை பிரபலங்கள் பங்கேற்பா?
சென்னை: நகைச்சுவை நடிகர் கிங் காங் தனது மகள் திருமணத்தை ஜோராக நடத்தி முடித்து விட்டார். சும்மாவா சொன்னார்கள் வீட்டைக் கட்டிப்பாரு.. கல்யாணம் பண்ணிப்பாருனு, எனக் கூறும் அளவுக்கு கிங் காங் தனது மகள் திருமணத்தை முடிப்பதற்குள் உலகத்தையே பல முறை சுற்றி வந்தது போல கலைத்துப் போயிருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நேற்று அதாவது ஜூலை 10 ஆம் தேதி காலையில், பெசன்ட் நகரில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களும் நேற்று வெளியானது. இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே நடிகர் கிங் காங் அரசியல் தலைவர்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பலரையும் ஓடி ஓடி தனது மகள் திருமணத்திற்கு வந்து மகளையும் மருமகனையும் வாழ்த்த வேண்டும் என்று கூறி வந்தார். அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் தான் யார் யாருக்கு பத்திரிகை வைத்தேன் என்பதை புகைப்படங்களாகவே பகிர்ந்து வந்தார்.

சேலம் ஆர். ஆர். பிரியாணி கடை உரிமையாளருக்கு பத்திரிகை வைத்த போது, அவர் பத்திரிகையைப் பெற்றுக் கொண்டு, கிங் காங் மகள் திருமண செலவுக்கு பணமும் கொடுத்தார். இது மட்டும் இல்லாமல் மற்றவர்களும் அவருக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருக்கும் நேரில் சென்று பத்திரிகை வழங்கினார். அதேபோல், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு அவரது வீட்டுக்கே சென்று பத்திரிகை வைத்தார்.
கோவிலில் திருமணம்: நேற்று காலை கோவிலில் திருமணம் நடைபெற்றது. இதனால் பல பிரபலங்களும் கோவிலுக்கு வரவில்லை. இதுவே பேசு பொருளாக மாறியது. ஆனால் கோவிலில் பிரபலங்கள் கூடினால், அது பக்தர்களுக்கு இடையூறாக அமைந்துவிடும் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அவர்கள் கோவிலுக்கு வரவில்லை.

பிரபலங்கள் பட்டியல்: ஆனால் மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த பிரபலங்களும் கலந்து கொண்டு கிங் காங்கின் மனதை குளிர வைத்து விட்டார்கள். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதேபோல் பிரபலங்களான, ராதாரவி, தம்பி ராமையா, மீசை ராஜேந்திரன், முன்னால் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஈரோடு மகேஷ், நகைச்சுவை நடிகர்கள் கணேஷ், ஆர்த்தி, காதல் சுகுமார், லொள்ளு சபா மாறன், ரோபோ சங்கர், வையாபுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











