For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அன்று முதல் இன்று வரை.. எவர் கிரீன்.. க்யூட் அழகிகளும் கொழு கொழு நாயகிகளும்!

  |

  சென்னை : ஹீரோயின்கள் என்றாலே கச்சிதமான இடுப்பு, நச்சுனு இருக்கும் பின்னழகு, பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் அழகு என்பது தான் இன்றைய கால கட்டத்தில் டிரெண்டிங். ஆனால், தன் உடல்வாகு மாறாமல் தன் இயல்பான உடல்மொழியால் வெற்றி பெற்ற நாயகிகளைப்பற்றி பார்க்கலாம்.

  Prabhas உடன் நடிக்க Deepika கேட்ட சம்பளம்

  பூசிய கன்னம், சற்று பெருத்த இடை, தழையத்தழைய சேலை, அழுத்தி வாரி சிடுக்கெடுத்த பின்னல், பதுமை நடை ஏதோ நம் வீட்டு பெண் திரையில் தோன்றுவது போல் ஓர் எதார்த்த உணர்வை ஏற்படுத்தும் அந்தக் காலத்து நாயகிகளைப் பார்த்தால்.

  கே.ஆர்.விஜயா, பத்மினி, தேவிகா என பல நடிகைகள் தங்கள் இயல்பான உடல் வாகை மாற்றிக் கொள்ளாமல் "குண்டழகி"யாக படம் முழுக்க வலம் வந்து, அந்த படங்களும் வெற்றிவாகை சூடின. ஒல்லி பில்லி இடுப்போ, பற்ற வைக்கும் கவர்ச்சிக்கோ முக்கியத்துவம் கொடுக்காமல் கதைகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

  70களின் டிரெண்டிங்.. மறக்க முடியாத.. ஒய்யாரக்கொண்டைகள்.. ஒரு பிளாஷ்பேக் !70களின் டிரெண்டிங்.. மறக்க முடியாத.. ஒய்யாரக்கொண்டைகள்.. ஒரு பிளாஷ்பேக் !

   தன்னிகரில்லா நடிகை

  தன்னிகரில்லா நடிகை

  நடிகர் திலகம் சாவித்திரி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திரையுலகம் பேசும் ஒரு அழகு பதுமை. ரசிகர்களின் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்த தன்னிகரில்லா நடிகை. சாவித்திரியின் உடலமைப்பில் படத்திற்கு படம் மாறுபாட்டைக் காணலாம். மிஸ்ஸியம்மா சாவித்திரி ஒரு அழகு. பாசமலர் சாவித்திரி வேறோரு அழகு, திருவருட்செல்வரில் ஊதிப்பெருத்த சாவித்திரி, கடைசி காலத்தில் அம்மா வேடங்களில் நடித்த சாவித்திரி என வெவ்வேறு தோற்றங்களைக் கொண்டி இருப்பார். என்னதான் தோற்றங்களை மாறினாலும் இவரின் நடிப்பை மிஞ்ச முடியவில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என அனைத்து நடிகர்களும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி பூசிய உடல் வாகுடன் வலம் வந்து பல படங்களை வெற்றி பெற செய்தார்.

   புன்னகை அரசி

  புன்னகை அரசி

  புன்னகை அரசி என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் கே.ஆர். விஜயா கற்பகம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அவர் அறிமுகமான முதல் படத்தில் என்னவோ ஊசிப்போல தேகத்துடன், கன கச்சிதமான இடையுடன் பல ரசிகர்களை பெற்று பல பட வாய்ப்புகளை பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தார். 1982 ஆம் ஆண்டு வெளியான நல்லநேரம் திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்த்து நடித்தார் கே.ஆர் .விஜயா ஆனால், அந்த படத்தில் இவரின் ஊசி இடை மிஸ் இவங்களா இந்த படத்தின் ஹீரோயின் என்று இந்த காலத்து இளசுகள் கேட்டாலும் அந்த காலத்தில் அந்த படம் ஹிட்டடித்தது என்பது தான் உண்மை.

   எவர் கிரீன் நாயகி

  எவர் கிரீன் நாயகி

  பொண்ணு சும்மா கும்முன்னு குஷ்பு மாதிரி இருக்கணும். இந்த சினிமா டையலாக்கை பல இடங்களில் நாம் கேட்டு இருப்போம். அந்த அளவுக்கு கொழுகொழுத்த கன்னம், தளதள தேகம், அழகோ அழகு இது தான் குஷ்புவின் ஸ்பெஷல். இவர் அறிமுகமான முதல் படத்தில் இருந்து இன்று வரை தனது இயல்பான உடல்வாகை மாற்றிக்கொள்ளவில்லை . தனக்கே உரித்தனா கொழுகொழுத்த தேகத்தை இவர் ஒரு தடையாகவே பார்க்கவில்லை. இன்று வரை இவர் மீதான ஆர்வம் ஒருதுளி கூட ரசிகர்களிடம் குறையவில்லை இன்றும் எவர் கிரீன் நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

   கொழு கொழு நாயகி

  கொழு கொழு நாயகி

  நடிகை நயன்தாரா சினிமாத்துறைக்கு வந்த போது என்னமோ கொழுகொழு வென்றுத்தான் இருந்தார். ஐயா ,சந்திரமுகி, கஜினி என ஆரம்ப கால கட்டத்தில் கொழுக் மொழுக் என்றுதான் இருந்தார். வல்லவன் படத்தில் தான் தன் இடையை குறைத்து ஒல்லிபெல்லி இடுப்பழகியாக மாறி சிம்புவுக்கு ஈடுகொடுத்து நடித்தார். அடுத்ததாக விஜயுடன் நடித்த வில்லு படத்தில் கொஞ்சம் வெயிட் போட்டார். பின்னர், ராஜாராணி, நானும் ரவுடிதான், டோரா போன்ற படங்களில் தொடர்ந்து தனது எடை கூட்டாமல் ஸ்லிம்மாகவே நடித்து வருகிறார்.

   சின்ன குஷ்பு

  சின்ன குஷ்பு

  ஹன்சிகாவின் கொழு கொழு அழகைப் பார்த்து அவரை சின்ன குஷ்பு என ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர். மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்2, மான்கராத்தே என பல படங்களில தனது கொழுத்த தேகத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டார். எந்த கொழு கொழு அழகால் ரசிகர்களை வளைத்தாரோ அந்த அழகை தற்போது குறைத்து சிக்கென்ற லுக்கிற்கு மாறி பின்னர் தனது செகண்ட் லுக்கை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் ஷாக்காகி உள்ளனர். இவருக்கு பப்லி லுக் தான் அழகு அந்த அந்த லுக்கைத்தான் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

  English summary
  Tamil Cinema has always seen many Chubby Actresses.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X