Surya Birthday: சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
சென்னை: வேட்டையன், தங்கலான், கங்குவா என்று அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. ஆனால், அந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை காட்டிலும், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி தற்போது ரீ ரிலீஸ் ஆக இருக்கும் படங்கள் தொடர்பான தகவல்கள்தான் தற்போது ஹாட் டாப்பிக் ஆக இருக்கிறது.
கமல்ஹாசனின் ஆளவந்தான், ரஜினிகாந்தின் முத்து, தனுஷின் 3, மயக்கம் என்ன போன்ற படங்கள் வெளியானது. அதே போல அஜித் நடித்த தீனா திரைப்படமும் வெளியானது. குறிப்பாக விஜய்யின் பிறந்த நாளையொட்டி கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளியது. 20 வருடத்திற்கு முன் வெளியான படத்தை இன்றைய இளம் தலைமுறையினர் தியேட்டரில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதையடுத்து, நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஜூலை 23 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சூர்யாவின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் தியேட்டரில் ரீ ரிலீஸ் ஆக உள்ளது

காக்க காக்க: கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் காக்க காக்க. இந்த படத்தில் ரௌடிகளை துரத்தும் மிடுக்கான ஏசிபி அன்புச்செழியன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் சூர்யா. சூர்யாவின் திரைப்பயணத்தில் இப்படம் மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.
அயன்: 2009ம் ஆண்டு, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் அயன். இப்படத்தில் சூர்யா, தமன்னா பாட்டியா, பிரபு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் சூர்யா ஒரு கடத்தல்காரராக நடித்திருந்தார். போதைப் பொருள் கடத்தல் எப்படி எல்லாம் நடக்கிறது என்பதை இப்படத்தில் இயக்குநர், தெளிவாக காட்டி இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பாக இருந்தது.
சிங்கம்: இயக்குநர் ஹரி இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் சிங்கம். அதிரடி ஆக்ஷன் கலந்த பொழுது போக்கு திரைப்படமான இப்படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்ற வசனம் இப்போது வரைக்கும் டிரெண்டிங்கில் உள்ளது. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்று பாகங்கள் வெளியானது. இப்படத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
வாரணம் ஆயிரம்: சூர்யா அப்பா மகன் என இரண்டு வேடத்தில் நடித்த திரைப்படம் வாரணம் ஆயிரம். கௌதம் மேனன் இயக்கிய இந்த படத்தில் சூர்யா அப்பாவின் கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருப்பார். மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்தில் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, அஞ்சலை, அனல் மேலே பனித்துளி என அனைத்துப்பாடல்களும் மாஸ் ஹிட். இன்றைய 20கே கிஸ்ட் பிளே லிஸ்டில் இந்த பாடல் கட்டாயம் இடம் பெற்றுள்ளது. இப்படத்தில் சூர்யா, சிம்ரன், குத்து ரம்யா ஆகியோர் நடித்திருந்தனர்.
கஜினி: சூர்யாவின் நடிப்புக்கு தீணிப்போட்ட திரைப்படமாக அமைந்தது கஜினி. ஐந்த நிமிஷத்தில் எல்லாத்தையும் மறந்துவிடும் ஒரு நோயாளியாக நடித்திருந்தார் சூர்யா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா என பலர் நடித்திருந்தனர். தமிழில் வெற்றிப்பெற்ற இத்திரைப்படம் பின் இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டு சக்கைப்போடு போட்டது. இப்படி சூர்யாவின் 50வது பிறந்த நாளுக்கு அட்டகாசமான மறக்க முடியாத திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆக உள்ளன.


Click it and Unblock the Notifications











