இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் மோதும் படங்களின் லிஸ்ட்… ரசிகர்களின் எதிர்பார்ப்பு எந்தப் படத்துக்கு?
சென்னை: இந்த வாரம் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் முன்னணி நடிகர்களின் படங்கள் மோத காத்திருக்கின்றன.
ஏற்கனவே கடந்த வாரங்களில் வெளியான முக்கியமான திரைப்படங்கள் தொடர்ந்து திரையரங்குகளை ஆக்கிரமித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த வாரம் வெளியாகும் படங்களில் எதற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

அதர்வாவின் பட்டத்து அரசன்
களவாணி, வாகை சூடவா படங்கள் மூலம் கவனம் ஈர்த்த சற்குணம், பட்டத்து அரசன் படத்தை இயக்கியுள்ளார். அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ராஜ்கிரணும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ஆஷிகா ரங்கநாத், ராதிகா சரத்குமார், ஆர்கே சுரேஷ், ராஜ் அய்யப்பா, பால சரவணன், சத்ரு உள்ளிட்ட பலர் நடித்துள்ள பட்டத்து அரசன் படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த லைகா புரொடக்ஷன்ஸ், பட்டத்து அரசன் மூலம் சின்ன பட்ஜெட்டிலும் களமிறங்குகிறது. கிராமத்துப் பின்னணியில் கபடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம், ஃபேமிலி ஆடியன்ஸ்களிடம் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தானம் நடிப்பில் ஏஜென்ட் கண்ணாயிரம்
காமெடியில் கலக்கி வந்த சந்தானம், சில வருடங்களாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அந்த வரிசையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள அடுத்த திரைப்படம் தான் ஏஜென்ட் கண்ணாயிரம். தெலுங்கில் ஹிட் அடித்த ஏஜென்ட் சீனிவாச ஆத்ரேயா என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இது உருவாகியுள்ளது. மனோஜ் பீதா என்பவர் தயாரித்து, இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சந்தானத்துடன் ரியா சுமன், ஷ்ருதி புகழ், ரெடின் கிங்க்ஸ்லி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் டார்க் காமெடியில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சசிகுமாரின் காரி
பட்டத்து அரசன், ஏஜென்ட் கண்ணாயிரம் படங்களைத் தொடர்ந்து, சசிகுமார் நடித்துள்ள காரி திரைப்படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. சசிகுமாருடன் பார்வதி அருண், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேமந்த் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்திற்கு, டி இமான் இசையமைத்துள்ளார். ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்துக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சசிகுமாருக்கு இந்தப் படம் கை கொடுக்குமா என்பதை வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும்.

நிகில் முருகனின் பவுடர்
கோலிவுட்டில் பல ஆண்டுகளாக PRO எனப்படும் மக்கள் தொடர்பாளராக வலம் வருபவர் நிகில் முருகன். அவர் ஹீரோவாக அறிமுகமாகும் பவுடர் திரைப்படமும் நாளை வெளியாகிறது. மோகன், குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். வித்யா பிரதீப், சாந்தினி தேவா, மொட்ட ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன் உள்ளிட்டோர் நடித்துள்ள பவுடர், காமெடி ஜானரில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், இந்தியில் வருண் தவான் நடித்துள்ள Bhediya என்ற திரைப்படம், தமிழில் ஓநாய் என்ற டைட்டிலில் நாளை வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











