அட நம்புங்க...இவரும் ஹிட் பட டைரக்டர் தாங்க...யாருன்னு சொன்னா அசந்துடுவீங்க

சென்னை : ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்தால் தான் பெரிய டைரக்டர், ஹிட் பட டைரக்டர் என பொதுவாக திரையுலகில் ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் இந்த பெரிய நடிகர்களை இயக்கமாலேயே பல ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர்களும் கோலிவுட்டில் உள்ளனர்.

Recommended Video

DIRECTOR HARI | A.L. VIJAY SPEECH | BORRDER MOVIE FIRSTLOOK LAUNCH| FILMIBEAT TAMIL

அப்படிப்பட்ட டைரக்டர்களில் ஒருவர் தான் ஹரி. இவர் இதுவரை ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரை வைத்து ஒரு படம் கூட இயக்கியதில்லை. ஆனால் விக்ரம், சூர்யா போன்றோரை மாஸ் ஹீரோக்களாக, நிஜ போலீசாக தமிழ் சினிமா ரசிகர்கள் முன் நிறுத்திய பெருமை டைரக்டர் ஹரியையே சேரும். திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள ஹரி சமீப காலமாக படம் ஏதும் இயக்கவில்லை என்றாலும், இவர் இயக்கிய படங்கள் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படாத வாரங்களே இல்லை.

ஹிட் படங்களில் பணியாற்றிய ஹரி

ஹிட் படங்களில் பணியாற்றிய ஹரி

தூத்துக்குடியில் பிறந்த ஹரி, சென்னை வந்து கே.பாலச்சந்தர், நாசர், நடராஜ், சரண் என பல டைரக்டர்களின் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி தனது அனுபவத்தை வளர்த்துக் கொண்டார். அவதாரம், அமர்க்களம் என பல ஹிட் படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டராக இவர் பணியாற்றினார். பிறகு 2002 ல் பிரஷாந்த், சிம்ரனை வைத்து தமிழ் என்ற படத்தை இயக்கி இயக்குனராக கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.

விக்ரமை மாஸ் ஹீரோவாக்கிய படம்

விக்ரமை மாஸ் ஹீரோவாக்கிய படம்

முதல் படமே ஓரளவிற்கு பேசப்பட்டு, தமிழ் சினிமாவின் முக்கிய டைரக்டர்கள் பட்டியலில் இணைந்தார் ஹரி. தனது இரண்டாவது படமாக விக்ரமை வைத்து சாமி படத்தை இயக்கினார். படம், பாடல், பஞ்ச் டயலாக், அதிரடி என அனைத்து வகையிலும் பிளாக் பஸ்டர் படமாக சாமி அமைந்தது.

இத்தனை ஹிட் படங்களா

இத்தனை ஹிட் படங்களா

தொடர்ந்து கோவில், அருள், அய்யா, ஆறு, தாமிரபரணி, வேல், சேவல், சிங்கம், வேங்கை, சிங்கம் 2, பூஜை, சிங்கம் 3, சாமி 2 ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் தான் டைரக்டர் ஹரி. போலீஸ் படம் என்றாலே உடனே அனைவருக்கும் நினைவில் வருவது சாமி, சிங்கம் படங்கள் தான்.

நச்சுன்னு பதிய வைத்த டைட்டில்கள்

நச்சுன்னு பதிய வைத்த டைட்டில்கள்

அந்த அளவில் ரசிகர்களின் மனதில் அழுத்தமான மாஸ் படங்களை கொடுத்தவர் ஹரி. சிறியதாக, மனதில் எளிதில் பதியக் கூடியதாக படங்களுக்கு டைட்டில் வைப்பதில் கைதேர்ந்த தமிழ் சினிமா டைரக்டர்களில் ஹரிக்கு முக்கியமான இடமுண்டு.

பாடலாசிரியரான ஹரி

பாடலாசிரியரான ஹரி

படம் இயக்குவதுடன் தனது படங்களில் வரும் சில ஹிட் பாடல்களை ஹரியே எழுதி உள்ளார். தாமிரபரணி படத்தில் தாலியே தேவையில்லை, வேல் படத்தில் தொப்புள் கொடி மற்றும் ஒற்றை கண்ணாலே, வேங்கை படத்தில் என்ன சொல்ல போற மற்றும் உன்ன மட்டும் புடிக்குது ஆகிய பாடங்களை ஹரி எழுதி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X