இந்த வாரம் மோதப் போவது விஜய் சேதுபதி, ஜெய், சுந்தர்.சி, சிபி சத்யராஜ் மற்றும் அசோக் செல்வன்

சென்னை: விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் கடந்த மூன்று வாரங்களாக எந்த பெரிய திரைப்படமும் வெளியாகவில்லை. அந்த அளவிற்கு வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.

வீட்ல விஷேஷம் என்ற படம் வெளி வந்திருந்தாலும் விக்ரமின் ஆட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வெறுமையை நிரப்பும் வகையில் இந்த வாரம் போட்டி போட்டுக் கொண்டு நான்கு திரைப்படங்கள் வெளியாகிறது.

விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன், சுந்தர்.C மற்றும் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி, அசோக் செல்வன் நடித்துள்ள வேழம் மற்றும் சிபி சத்யராஜ் நடித்துள்ள மாயோன் திரைப்படங்கள் இன்று ரிலீஸாகிறது.

மாமனிதன்

மாமனிதன்

காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம் திரைப்படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பிற்கிடையே வெளியாகிறது. காரணம் முதல் முறையாக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா சேர்ந்து இசையமைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான RK சுரேஷ் விநியோகிக்கிறார்.

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி

சுந்தர்.C கதாநாயகனாகவும், ஜெய் சைக்கோ வில்லனாகவும் நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படமும் வெளியாகிறது. சுந்தர்.C-யை வைத்து அதிக படங்களை இயக்கிய பத்ரிதான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். ஜெய் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். சைக்கோ த்ரில்லர் என்பதால் இந்தப் படம் அதிகமாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வேழம்

வேழம்

அசோக் செல்வன், ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள திரைப்படம் "வேழம்". யானையின் இன்னொரு பெயர்தான் வேழம். இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கியுள்ளார். சைக்கலாஜிக்கல் ஜானரில் அமைந்துள்ள இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களை தவிர பெரும்பாலும் புது முகங்களே பணி புரிந்துள்ளனர். SP சினிமாஸ் இந்தப் படத்தை விநியோகம் செய்கிறது.

மாயோன்

மாயோன்

சிபி சத்யராஜ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் மித்தலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள படம்தான் "மாயோன்". இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் வித்யாசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு படங்களில் எது மக்களின் ஆதரவை பெற போகிறது என்று இன்று தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X