கோட் டூ தேவாரா முதல்… செப்டம்பரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: இந்த மாதம் தியேட்டரில் அந்தகன், தங்கலான், டிமான்டி காலனி, ரகு தாத்தா என முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானது. இதில், பிரசாந்தின் அந்தகன் படம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து, அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தங்கலான் படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் தியேட்டரில் வெளியாக இருக்கும் படங்களை பார்க்கலாம்.

கோட்: நடிகர் விஜய் நடிப்பில் தி கோட் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதனை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது. தி கோட் திரைப்படத்தில், பல ஆண்டுகளுக்கு முன் பிரபல ஹீரோவாக இருந்த மைக் மோகன், கோட் திரைப்படம் மூலம் கம்-பேக் கொடுக்க இருக்கிறார். மேலும், பிரசாந்த்,பிரபு தேவா, அஜ்மல், பிரேம்ஜி, ஜெயராம், சினேகா, மீனாட்சி சௌத்ரி, ஒய்ஜி மகேந்திரன் என பலர் நடித்துள்ளனர்.

GOAT Devara part 1 September

தேவாரா: கொரட்டாலா சிவா இயக்கத்தில் 'தேவாரா' என்கிற படத்தில் நடித்துத் வருகிறார் ஜூனியர் என்டிஆர். இதில், ஜான்வி கபூர், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீகாந்த், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படத்திலிருந்து இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இத்திரைப்படம் செப்டம்பர் 27 ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

தோழர் சேகுவேரா: அலெக்ஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள தோழர் சேகுவேரா படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிஎஸ் அஸ்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தை அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தின் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம், அடுத்த மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Emergency: தாகத், சந்திரமுகி 2, தேஜஸ் என அடுத்தடுத்த படங்களின் தோல்வியில் இருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். வெற்றியை எதிர்நோக்கும் அவரின் அடுத்த படைப்பு எமர்ஜென்சி. இப்படத்தை இயக்கி நடித்துள்ளார் கங்கனா. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 6ந் தேதி வெளியாக உள்ளது. ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மெய்யழகன்: விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' படத்தை இயக்கி புகழ் பெற்ற பிரேம்குமார் இயக்கி இருக்கும் அடுத்த திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் கார்த்திக்குடன் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படம் செப்டம்பர் 27ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

GOAT Devara part 1 September

லக்கி பாஸ்கர்: வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 1980 களின் பிற்பகுதியில் 1990 களின் முற்பகுதி வரை ஒரு வங்கி காசாளரின் அசாதாரண வாழ்க்கையை விவரிக்கும் வகையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

GOAT Devara part 1 September

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X