Theatre Release: ஜெயிலர் ஃபீவர் ஓவர்.. இந்த வாரம் மட்டும் திரையரங்கில் இத்தனை படங்கள் ரிலீஸா?
சென்னை: இந்த வாரம்ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்
ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆக்ஸ்ட் 10-ந் தேதி திரையில் வெளியாகி சக்கைப்போடு போட்டதால், பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் கடந்த இரண்டு வாரங்களாக வெளியாகவில்லை.
கடந்த வாரம் ஜிவி பிரகாஷ் நடித்த அடியே, பார்ட்னர் போன்ற படங்கள் வெளியின நிலையில், இந்த வாரமே தமிழில் 4 திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதன் விவரத்தை பார்க்கலாம்.

குஷி: இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குஷி. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 1ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

கிக்: சந்தானம் நடிப்பில் வெளியான கடந்த மாதம் 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது கிக் திரைப்படம் சந்தானம் நடித்துள்ள கிக் திரைப்படத்தை கன்னடத்தில் வெளியான லவ்குரு, கானா பஜானா, போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்துக்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கருமேகங்கள் கலைகின்றன: தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இப்படத்தில் தந்தை - மகன் இடையிலான உணர்வு போராட்டமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அதிதீ பாலன், மம்தா மோகன்தாஸ், இயக்குநர் இமயம் பாரதிராஜா, யோகி பாபு, இயக்குநர்கள் கெளதம் மேனன், ஆர்வி உதயகுமார், எஸ்ஏ சந்திரசேகரன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
பரம்பொருள்: அரவிந்த்ராஜ் இயக்கத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் பரம்பொருள். பழங்கால சிலை திருட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். இப்பாடலின் மூலம் யுவன்ஷங்கர் ராஜாவுடன் முதன்முதலாக இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளார். இப்படம் செப்டம்பர் 1ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

டிடி ரிட்டர்ன்ஸ்: நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், மாறன், மாசூம் சங்கர், தீபா, பிரதீப் ராவத், விபின், பெப்சி விஜயன், தீனா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திகில் படம் 40 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் செப்டம்பர் 1ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











