தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார், சிவகார்த்தியின் பிரின்ஸுடன் மோத காத்திருக்கும் படங்களின் லிஸ்ட்

சென்னை: வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாப்படவுள்ளதால் சினிமா ரசிகர்களுக்கான புதிய படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தீபாவளியை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின்றன.

தமிழில் கார்த்தி, சிவகார்த்தியன் ரசிகர்களுக்கு சர்தார், பிரின்ஸ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

சர்தார், பிரின்ஸ்

சர்தார், பிரின்ஸ்

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை தினத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமிக்கும். தீபாவளி வெளியீட்டை கணக்கில் வைத்தே பெரிய பட்ஜெட் படங்கள் தயாராகி வருவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு கார்த்தி, சிவகார்த்திகேயன் இருவரின் படங்கள் மட்டுமே தமிழில் வெளியாகின்றன. கார்த்தி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள சர்தார், தீபாவளியை முன்னிட்டு, நாளை மறுநாள் (அக் 21) திரையரங்குகளில் வெளியாகிறது. அதேபோல், சிவகார்த்திகேயன், சத்யராஜ், வெளிநாட்டு நடிகை மரியா ஆகியோர் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை அனுதீப் இயக்கியுள்ளார்.

மலையாளம், தெலுங்கு ரிலீஸ்

மலையாளம், தெலுங்கு ரிலீஸ்

அதேபோல், மலையாளத்தில் முன்னணி நடிகர்களான மோகன்லால், நிவின் பாலி இருவரின் படங்கள் வெளியாகின்றன. மோகன்லால் நடிப்பில் வைசாக் இயக்கியுள்ள மான்ஸ்டர் திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு வரும் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும், நிவின் பாலி நடித்து படவீட்டு திரைப்படமும் தீபாவளி ஸ்பெஷலாக வரும் 21ம் தேதி வெளியாகிறது. இதில், மோகன்லாலின் மான்ஸ்டர் சென்சார் பிரச்சினையால் அரபு நாடுகளில் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தெலுங்கில் 'மஞ்சு விஷ்ணு, பாயல் ராஜ்புட் நடித்துள்ள 'ஜின்னா' திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் 21ம் தேதி ரிலீஸாகிறது.

இந்தி, கன்னடம் ரிலீஸ்

இந்தி, கன்னடம் ரிலீஸ்

கன்னடத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கந்தாட குடி திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது. ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துகொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த புனித் ராஜ்குமார் நடித்த கடைசிப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், புனித் ராஜ்குமார் ரசிகர்களிடம் 'கந்தாட குடி' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தியில் அக்சய் குமார் நடித்துள்ள 'ராம் சேது' திரைப்படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது. ராமர் பாலத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை அபிஷேக் ஷர்மா இயக்கியுள்ளார். தொடர்ந்து தோல்வியால் தடுமாறி வரும் அக்‌ஷய் குமாருக்கு ராம் சேது கம்பேக் கொடுக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கோலிவுட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

கோலிவுட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

தமிழில் சர்தார், பிரின்ஸ் படங்கள் மட்டும் வெளியாகவுள்ளதால், இரண்டு படங்களுமே வசூலில் ஒரளவு கரை சேர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்தார் ஸ்பை திரில்லர் ஜானரில் ஆக்சன் படமாகவும், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் கொஞ்சம் காமெடி படமாக இருக்கும் என்பது ட்ரெய்லரில் உறுதியாகியுள்ளது. அதனால், இளைஞர்கள், ஃபேமிலி ஆடியன்ஸ்களுக்கு நல்ல எண்டர்டெயின்மெண்ட் கிடைத்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் பொன்னியின் செல்வனும் இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X