twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த படங்களிலெல்லாம் இந்த ஹீரோக்கள் செய்த கொடூரமான வில்லத்தனங்கள் - ஒரு பார்வை

    |

    சென்னை: தமிழ் சினிமாவில் பக்கம் பக்கமாக பஞ்ச் வசனங்களைப் பேசி, உணர்வுப்பூர்வமான காட்சிகளால் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்பவர்கள் ஹீரோக்கள்.

    ஆனால் அதே ஹீரோக்கள் திடீரென வில்லன்களாக கெட்டப் மாற்றி நடித்திருந்தால் எப்படி இருக்கும்? அப்படி தான் இருந்தது இங்கே குறிப்பிடும் படங்கள் வெளிவந்த காலக்கட்டத்தில்.

    இருந்தாலும் மக்களிடம் தங்களது ஹீரோ இமேஜ் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக, புத்திசாலித்தனமாக ஹீரோவாகவும், வில்லனாகவும் இருவேடங்களில் நடித்து தங்களது நற்பெயரையும் தக்க வைத்துக் கொண்டார்கள் இவர்களில் சில கதாநாயகர்கள்.

    பாரதிக்கு 2வது திருமணம்.. பொண்ணு யாரு தெரியுமா.. மேடையில் ஓபனாக பேசிய ஹேமா! பாரதிக்கு 2வது திருமணம்.. பொண்ணு யாரு தெரியுமா.. மேடையில் ஓபனாக பேசிய ஹேமா!

    வஷீ.....மே...

    வஷீ.....மே...

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லத்தனம் சொல்லியா கொடுக்க வேண்டும்? மக்களிடம் அறிமுகமானதே வில்லனாகத் தானே? 16 வயதினிலே பரட்டையை இன்று வரையில் யாராவது மறந்து விட முடியுமா என்ன? அப்படிப்பட்ட சிறந்த நடிகர் பல வருடங்களுக்குப் பிறகு ஷங்கரின் எந்திரன் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். தனக்கே உரிய ஸ்டைல் மாறாமல் வில்லனையும் ரசிக்க வைத்தார். வஷி ..மே.. என நக்கலாக அவர் காட்டும் முகபாவனைகள் சூப்பரோ சூப்பர்.

    கடவுள் பாதி மிருகம் பாதி

    கடவுள் பாதி மிருகம் பாதி

    அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் உலகையே தனது படைப்புகளால் திரும்பிப் பார்க்க வைத்தவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் பல 'முதல்'கள் இவரால் அறிமுகம் செய்யப்பட்டவையே. அந்த வகையில், ஆளவந்தான் திரைப்படத்தில் நந்து கதாப்பாத்திரத்தில் சைக்கோத்தனமான வில்லனாக பிரமிக்க வைத்திருப்பார். அப்படத்திற்காக உடல் எடையை 20 கிலோவுக்கும் மேல் ஏற்றி பல மெனக்கெடல்களுக்கு மத்தியில் அக்கதாப்பாத்திரத்தில் நடித்தார். இப்போது வரை ஆளவந்தான் நந்து கதாப்பாத்திரம் புதிய ஹீரோக்களுக்கு ஒரு நூலகம் போல் பல ரெபரென்ஸ்களைக் கொடுக்கின்றது அவ்வளவு டீட்டெயில் அதில் உள்ளது.

    வில்லாதி வில்லன்

    வில்லாதி வில்லன்

    ஆரம்ப காலத்தில் சாக்லெட் பாயாக அறிமுகமாகி பின்னாளில் ஆக்சன் அவதாரம் எடுத்தவர் அஜித். அமைதியான ஹீரோவாகவே போய் கொண்டிருந்த அவரது பயணத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சட்டென வியக்க வைத்த படம் தான் வாலி. தேவா கதாபாத்திரத்தில் காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாகவும், தம்பி பொண்டாட்டியின் மீது ஆசைப்படும் கொடூரனாகவும் நடித்திருந்தார். மக்களிடம் நற்பெயர் பெற்று பீக்கில் இருந்த அக்காலக்கட்டத்தில் இக்கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒரு தில்லு வேண்டும். அஜித் அதை துணிச்சலாக ஏற்று நடித்தார்.

    அழகிய தமிழ் மகன்

    அழகிய தமிழ் மகன்

    விஜய்யைப் பொறுத்த வரையில், அவ்வளவு கொடூர வில்லனாக இதுவரை நடிக்கவில்லை என்றாலும் அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் நெகட்டிவ் ஷேட் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார். குரு மற்றும் பிரசாத் என்ற இரு வேடங்களில் பிரசாத் கதாபாத்திரத்தில் பெண்களை ஏமாற்றும் ஒரு விமனைசராக நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் விஜயை ஒரு கியூட்டான சூப்பர் ஹீரோவாகவே பார்த்துவிட்ட மக்களால் பிரசாத் கதாப்பாத்திரத்தை ரசிக்க முடியவில்லை என்று சொல்லலாம்.

    விக்ரம்

    விக்ரம்

    எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அக்கதாபாத்திரமாகவே மாறுகின்ற மாயவித்தை தெரிந்தவரான விக்ரம் டபுள் ஆக்ட்டிங் செய்யாமல் நேரடியாக வில்லனாகக் களமிறங்கிய படம் ராவணன். என்றாலும், ராவணன் திரைப்படத்தில், கதைக்குத் தான் விக்ரம் வில்லனே தவிர, தன் இனத்திற்காகப் பாடுபடும் ஒருவன் எப்போதுமே நிஜ வாழ்க்கையில் ஹீரோ தான். அதனால் அக்கதாபாத்திரம் ரசிகர்களால் ஹீரோவாகவே தான் பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இருமுகனில் இருவேடங்களில் ஒன்றாக டாக்டர் லவ் கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருப்பார் விக்ரம்.

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    ஹீரோவோ, வில்லனோ, முதியவரோ, திருநங்கையோ எது வேணாலும் கொடுங்க, நான் என் தனித்துவமான நடிப்பார் ரசிக்க வைக்கிறேன் என்ற கொள்கையில் இருப்பவர் விஜய்சேதுபதி. தனக்கென்று எந்த ஒரு இமேஜையும் போட்டுக் கொள்ளாமல் எந்த ஒரு வரையரைக்குள்ளும் சிக்காமல் நடிப்பவர். அப்படி அவர் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக பேட்ட படத்தில் ஆரம்பித்து, பின்னர் விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் கலக்கினார். என்றாலும் மக்களின் மனதில் இன்னும் மக்கள் செல்வனாகவே தான் இருந்து வருகின்றார். இவர்களைப் போல் சூர்யா 24, சிம்பு மன்மதன், தனுஷ் மாரி, ஜெயம்ரவி ஆதிபகவன், கார்த்தி காஷ்மோரா என தங்களது சினிமா பயணத்தில் ஒரு படத்திலாவது வில்லனாக நடித்து தங்களது ஆசையைத் தீர்த்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    List of Movies where leading tamil actors become mass villan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X