யானை முதல் டி பிளாக் வரை.. தியேட்டர்,ஒடிடியில் நாளை வெளியாகும் படம்!
சென்னை : தமிழ் சினிமாவில் நாளை மொத்தம் 3 படங்கள் ரிலீசாக உள்ளது. இதனால், சினிமா பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய படங்களின் வருகையால் சிறு பட்ஜெட் படங்களின் வருகை தற்போது குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக வாரந்தோறும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்த மாதமும் கமலின் விக்ரம் படம் ஜூன் 3-ந் தேதி ரிலீசானது. இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சிறு பட்ஜெட் படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. நாளை வெள்ளிக்கிழமை என்பதால் திரையரங்கில் வெளியாகும் படங்கள், ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

யானை
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் யானை. ட்ரம்ஸ்டிக் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.ஜி.எஃப் படத்தில் கருடனாக நடித்த ராம் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நாளை வெளியாக உள்ளது.

தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்
மாதவன் தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் நீண்டஎதிர்பார்ப்புக்கு இடையே நாளை வெளியாக உள்ளது. இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. மேலும், கேன்ஸ் திரைப்பட விழாவிலும் அமெரிக்கா மற்றும் அமீரகத்திலும் இப்படம் திரையிடப்பட்டது. கௌரவ தோற்றத்தில் ஷாருக்கான், சூர்யா போன்றவர்களும் நடித்துள்ளனர். 80 வயதான விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாதவனும், அவரது மனைவியாக சிம்ரனும் நடித்துள்ளார்.

டி பிளாக்
பிரபல யூட்யூப் சேனலான எரும சாணி சேனலின் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ள திரைப்படம் 'டி பிளாக்' முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை எம்.என்.எம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக அரவிந்த் சிங் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை அவந்திகா நடித்துள்ளார். இப்படமும் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது.

விரட்ட பருவம்
சாய்பல்லவி, ராணா, பிரியாமணி மற்றும் ஈஸ்வரி ராவ் ஆகிய நடிகர்கள் நடித்துள்ள விரட்ட பருவம் கடந்த ஜூன் 17 ஆம் தேதி வெளியானது. கதாநாயகன் ராணாவை விட சாய்பல்லவிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சாய்பல்லவி நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் நாளை முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

நாளை முதல் ஓடிடியில்
அக்சய்குமார் நடிப்பில் வரலாற்று கதையை மையமாக கொண்டு உருவான 'சாம்ராட் பிருத்விராஜ்' படம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. விஜய் பாபு, ரஜிஷா வில்சன் நடித்த 'கீடம்' மலையாள படம் ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது. அதேபோல கங்கனா ரணாவத் லீட் ரோலில் நடித்த 'தாகத்' படத்தை நாளை ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











