twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாயதாளம்..பம்பை..உருமி..பொன்னியின் செல்வன் படத்திற்காக வாங்கப்பட்ட இசைக்கருவிகள் என்னென்ன தெரியுமா?

    |

    சென்னை : மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய இசைக்கருவிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.

    ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடைபெற்றது.

    அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல் அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல்

    இறுதிகட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தின் கோட்டை நகரம் என அழைக்கப்படும் குவாலியரில் நடைபெற்றது. குவாலியர் கோட்டை 9ஆம் நுற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது.

    முன்னணி நடிகர்கள்

    முன்னணி நடிகர்கள்

    மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மிரட்டலான டீசர்

    மிரட்டலான டீசர்

    இப்படத்தின் டீசர் வெளியீடு சென்னை வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது. குதிரைப்படை, யானைப்படை, சீரிப்பாய்ந்து வந்த கப்பல், விக்ரமின் கர்ஜிக்கும் குரல் என டீசர் மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. அட்டகாசமான பின்னணி இசை அமைத்து 10ம் நூற்றாண்டுக்கே நம்மை அழைத்துச் சென்றுவிட்டார் ஏஆர்.ரஹ்மான். டீசர் 24 மணி நேரத்திற்குள்ளாகவே ஒரு கோடி பார்வையைக் கடந்து சாதனை படைத்தது.

    இசைக்கருவிகள்

    இசைக்கருவிகள்

    தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இசையமைப்பதற்காக, அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை ஏ.ஆர்.ரஹ்மான வாங்கி குவித்துள்ளார். அந்த இசைக்கருவிகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், எக்காளம், நாயனதாளம், தம்பாட்டம், பம்பை, துடி, கிடுகிட்டி, சுந்தரவளைவு, தப்பு, பஞ்சமுக வாத்தியம், நாதஸ்வரம், வீணை, உடுக்கை, உருமி, கொம்பு ஆகிய வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இவ்வளவு இசைக்கருவிகளை வாங்கி உள்ளாரா என ரசிகர்கள் வியந்து பார்க்கின்றனர்.

    Recommended Video

    Chiyaan Vikram | தீயாய் பரவும் தகவல்... ஆர்வத்தில் ரசிகர்கள் *Kollywood
    மொத்தம் 12 பாடல்கள்

    மொத்தம் 12 பாடல்கள்

    இரண்டு பாகமாக வெளியாக உள்ள இப்படத்தில் முதல் பாகத்தில் 6 பாடல்களும், இரண்டாம் பாகத்தில் 6 பாடல்கள் என மொத்தம் 12 பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒரு பாடலை இயக்குநர் மணிரத்னமே எழுதியுள்ளதாகவும். வழக்கமாக மணிரத்னம் படங்களுக்கு வைரமுத்து பாடல்களை எழுதுவார். ஆனால் முதல் முறையாக பொன்னியின் செல்வன் படத்துக்காக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், வெண்பல கீதையன், கபிலன் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளார்கள்.

    English summary
    List of old ancient Tamil instruments bought by AR Rahman for Ponniyin Selvan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X