உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை.. ஓடிடி-யில் மிஸ் பண்ணிடவே கூடாத சைக்கோ த்ரில்லர் படங்கள்!
சென்னை: கொட்டகையில் மேலும் கீழுமாக, இழுத்துக் கட்டப்பட்ட திரை.., அதில் தெரியும் படம், கொட்டகைக்கு வெளியே வீசும் காற்றில் திரையோடு சேர்ந்து முன்னும் பின்னுமாக ஆடும். அந்த படத்தை மணலில் அமர்ந்து, பெஞ்சில் அமர்ந்து பார்த்த சமூகம் நாம். தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் இன்றைக்கு ஐமேக்ஸ் திரையில் 3டி க்ளாஸ் அணிந்து படம் பார்க்கின்றோம். இந்த அறிவியல் வளர்ச்சி, சினிமா தரத்தை நாளுக்கு நாள் உயர்த்திக் கொண்டே போகின்றது. ஆனால் எப்போதும், எல்லோராலும் திரையரங்கிற்கு குடும்பத்தோடு சென்று படங்களை பார்க்க முடியாதபடி டிக்கெட் ரேட் ஏறிவிட்டது. பாப்கார்ன் ரேட் பல்ஸை எகிற வைக்கிறது.
ஓ.டி.டி தளங்கள்: இப்படியான சூழலில் மக்கள் குறைந்த செலவில் வகை வகையான படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி வைப்பது ஓ.டி.டி தளங்கள்தான். இன்றைய ஓ.டி.டி தளங்களால் தியேட்டருக்கு வருமானம் குறைந்து விட்டது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், ஓ.டி.டி தளங்கள் ரசிகர்களின் பணம்-நேர விரையத்தை, அலைச்சலை தடுத்துள்ளது. தியேட்டரில் சென்று படம் பார்க்கும் அனுபவத்தை ஓ.டி.டி தளங்கள் தராது என்ற பேச்சும் இருந்தாலும், ஓ.டி.டி தளங்களுக்கான வரவேற்பு என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. குறிப்பாக வெளிமாநிலங்களில்,வெளிநாட்டில் வெளியாகும் படங்களை, முன்பு எப்போதோ வெளியான படங்களை ஓ.டி.டி தளத்தில் பார்த்து விட முடிகின்றது என்கின்றனர் ஓ.டி.டி ரசிகர்கள். மேலும் எதிர்காலத்தில் ஓ.டி.டிதான் சினிமாவின் வர்த்தகத்தை தீர்மானிக்கப்போகின்றது எனவும் கூறுகின்றனர்.

இந்நிலையில் தியேட்டரில் பார்க்க முடியாத ஓ.டி.டியில் உள்ள படங்கள் குறித்து, “ உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை.. ஓ.டி.டியில் மிஸ் பண்ணிடவே கூடாத படங்கள்” என்ற தலைப்பின் கீழ் நமது நமது "பில்மிபீட்தமிழ்" தளத்தில் வாரந்தோறும் உங்களுக்கான பரிந்துரைகளை காணலாம். அதன் முதல்கட்டமாக, சினிமா உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய சைக்கோ த்ரில்லர் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
1. No Country For Old Man: 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஈதன் கோயென் மற்றும் ஜோயெல் கோயென் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இரண்டு மணி நேரம் இரண்டு நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோவியர் பார்டெம், மிகுந்த அச்ச உணர்வை ரசிகர்களுக்கு கடத்திக் கொண்டே இருப்பார். 2008ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஆஸ்கார் விருதுகளில் இந்த படம் மொத்தம் 4 விருதுகளை வென்றது. இந்த படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் உள்ளது.

2. I Saw The Devil: 2010 ஆம் ஆண்டு வெளியான இந்த கொரியன் படத்தை கிம் ஜீ வூன் இயக்கியுள்ள இந்த படத்தை மையமாகக் கொண்டு தமிழில் கடந்த 2020ஆம் ஆண்டு சைக்கோ திரைப்படம் வெளியானது. சீரியல் கொலைகாரன் உண்மையிலேயே ஆபத்தானவன் என நாம் நினைத்துக் கொண்டு இருக்கையில், அவனத் துரத்திச் செல்லும் போலீஸ் அதிகாரி அவனைவிட மோசமானவனாக இருப்பான். மொத்தம் 2 மணி நேரம் 22 நிமிடங்கள் இருக்கும் இந்த படம் அமேசான் பிரைமில் உள்ளது.

3. DHAMER - The Jeffrey Dahmer Story: அமெரிக்காவையே அதிரவைத்த 17 பேரை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரனைப் பற்றிய உண்மையைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட வெப் சீரிஸ்தான் இந்த DHAMER. மொத்தம் 10 எப்பொசோட்களைக் கொண்ட இந்த வெப் சீரிஸின் ஒவ்வொரு எப்பிசோடும் நமக்கு பெரும் திகிலூட்டக்கூடியதாக இருக்கும். தன்னைப் பற்றி போலீஸில் புகார் கொடுத்த பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு மனித மாமிசத்தில் பர்கர் செய்து கொண்டுபோய் கொடுக்கும் காட்சி எல்லாம் ரணகளமாக இருக்கும். நெட் ஃபிளிக்ஸ் இருக்கும் இந்த வெப் சீரிஸை தவற விட்டுவிடாதீர்கள்.

4. ராட்சசன்: உலக சினிமா தரத்திற்கு தமிழ் சினிமாவில் சைக்கோ த்ரில்லர் படங்கள் பல வெளியாகி இருந்தாலும் 2018ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் ஏற்படுத்திய தாக்கத்தை மற்ற படங்கள் ஏற்படுத்தவில்லை. அமேசான் பிரைமிலும் சன் நெக்ஸ்ட் தளத்திலும் உள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பள்ளிக்குழந்தைகளை டார்கெட் செய்து கொலை செய்யும் கொலைகாரனை மையப்படுத்திய சைக்கோ த்ரில்லர் படம்தான் ராட்சசன்.

அமேசான் பிரைமிலும் சன் நெக்ஸ்ட் தளத்திலும் உள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பள்ளிக்குழந்தைகளை டார்கெட் செய்து கொலை செய்யும் கொலைகாரனை மையப்படுத்திய சைக்கோ திர்ல்லர் படம்தான் ராட்சசன்.


Click it and Unblock the Notifications











