Dhanush: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தனுஷ்.. இந்த முறை நயன்தாரா.. இதுவரை யார் யார்? இதோ லிஸ்ட்!

சென்னை: பிரபலமாக மாறிவிட்டாலே சர்ச்சைகளும் உடன் சேர்ந்து வந்துவிடுவது என்னமோ சினிமா உலகில் வாடிக்கையாக மாறிவிட்டது. அப்படி தமிழ் சினிமாவில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இப்படியான நிலையில் நடிகர் தனுஷ்க்கும் சர்ச்சைக்கும் 10 பொருத்தங்களும் நன்றாக பொருந்திப்போகும்போல எனக் கூறும் அளவிற்கு, அவர் அமைதியாக இருந்தாலும் சர்ச்சைகள் அவரை சும்மா இருக்க விடுவதில்லை. தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண டாக்குமெண்டரி வீடியோ தொடர்பான சர்ச்சைக்கு ஆளாகியுள்ள தனுஷ் இதுவரை என்னனென்ன சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளார் என்பது குறித்து பார்க்கலாம்.

தனுஷ், தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இல்லாமல், பாடலாசிரியராக, பாடகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக, கதை, திரைக்கதை எழுத்தாளராக வலம் வருகின்றார். தனது 50வது படத்தினைக் கூட தானே இயக்கி நடித்து, படத்தினை வெற்றி பெறவும் செய்திருந்தார். அடுத்து இவரது இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியாகவுள்ளது. இது இல்லாமல், குபேரா படம் இவரது நடிப்பில் ரிலீஸ் ஆகவுள்ளது. இட்லி கடை படத்தினை இயக்கி வருகின்றார்.

dhanush nayanthara sivakarthikeyan

தற்போது நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை தனுஷ் மீது பெரும் குற்றச்சாட்டுகளை அடுக்குவதாக உள்ளது. இந்நிலையில், தனுஷ் இதுவரை கடந்து வந்த சர்ச்சைகள் என்னென்ன என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்றும், சிறுவயதில் காணாமல் போன தனுஷினை எங்களுக்கு மீட்டுத் தரும்படி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இது பெரும் சர்ச்சையாக மாறியது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று, தனுஷ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. ஆர்.ஜே. மற்றும் பாடகி சுசித்ராவின் பெயரில் அதுவும் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் இரவு நேர பார்ட்டிகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. இதற்கு தனுஷ் மற்றும் தனது முன்னாள் கணவரும்தான் காரணம் என இப்போதுவரை சுசித்ரா கூறிவருகின்றார். இது பெரும் சர்ச்சையாக மாறியது.

சிவகார்த்திகேயன்: நடிகர் தனுஷ் உடன் அமலாபால் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தார். அதன் பின்னர் அமலாபாலுக்கும் அவரது முதல் கணவர் இயக்குநர் விஜய்க்கும் விவாகரத்து ஏற்பட்டது. இவர்களின் விவாகரத்துக்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என திரையுலகில் பரவலாக பேசப்பட்டது. அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயனை அடையாளம் காட்டி, அவரை தமிழ் சினிமாவிற்கு அழைத்துவந்து அவரை பெரும் ஸ்டாராக மாற்றியதில் தனுஷ்ஷின் பங்கு முக்கியமானது எனக் கூறப்படுகின்றது. இதனை சிவகார்த்திகேயனும் அவரது ரசிகர்களும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷ்ஷின் கேப்டன் மில்லர் படங்கள் வெளியானபோது இருதரப்புக்கும் இடையிலான மோதல் இணையத்தில் அதிகரித்தது.

விவாகரத்து: அதேபோல் தனது விவாகரத்து குறித்து அறிவித்தபோது அவரைச் சுற்றி எழுந்த சர்ச்சைகள் ஏராளம். இதுமட்டும் இல்லாமல், தமிழ் சினிமா உலகில் வேறு யாராவது விவாகரத்து செய்தால் உடனே தனுஷ்தான் காரணம் எனக் கைகாட்டும் கோஷ்டிகளும் இணையத்தில் உலாவுகின்றது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் - சைந்தவி தங்களது விவாகரத்தினை அறிவிக்கும்போதும் தனுஷ்தான் காரணம் என தனுஷ் மீது வன்மத்தைக் கொட்டினார்கள். ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்தை அறிவிக்கும்போதும் ஆர்த்தியும் தனுஷ்ஷும் முன்பு எப்போதோ எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து தனுஷ்தான் விவாகரத்துக்கு காரணம் என சர்ச்சையைக் கிளப்பினார்கள்.

தனுஷ் பதில்: ஆனால் இவை அனைத்தும் சர்ச்சைகளாகவும் பொய்யை இட்டுக்கட்டிப் பரப்பும் வதந்திகளாகவுமே இருந்ததால், தனுஷ் அமைதியாக இருந்தார். ஆனால் இப்போது நடிகை நயன்தாரா தனுஷை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளதால் இதற்கு தனுஷ் பதில் அளிப்பார் எனக் கூறப்படுகின்றது. மேலும் இணையத்தில் தனுஷ்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X