Prathap Pothen: பிரதாப் போத்தன் திரைப்பயணம்.. எதார்த்த இயக்குநரின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் !
சென்னை : நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70.
Recommended Video
அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதாப் போத்தன் மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிரதாப் போத்தன் கடைசியாக தமிழில் விஜய்சேதுபதி நடித்த துக்ளக் தர்பார் படத்தில் நடித்திருந்தார். இது விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

பிரதாப் போத்தன்
பிரதாப் போத்தன் என்றதும் நம் நினைவுக்கு வருவது கிட்டாரை வைத்துக் கொண்டு "என் இனிய பொன்நிலவே" பாடுவது தான். ஆனால், தமிழ் சினிமாவின் பொற்காலமாக கொண்டாடப்படும் 80களில் நுழைந்து தனக்கென தனிஅங்கீகாரத்தை பெற்றவர் தான் பிரதாப் போத்தன். மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற பேராற்றல் கொண்ட படைப்பாளிகளின் படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியவர் பிரதாப் போத்தன்.தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநராக ஜொலித்தார்
நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என தனக்கான ஸ்டைலில் படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டார். அதில், மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன்,மலையாளத்தில் ருத்ரபீடம்,டைசி,ஒரு யாத்தரமொழி உள்ளிட்ட 12 படங்களை இயக்கி உள்ளார். இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தேசியவிருதை பெற்றார்.

வித்யாசமான சிந்தனை
பிரதாப் போத்தன் இயக்கிய மை டியர் மார்த்தாண்டன் திரைப்படத்தில் பிரபு, நடிகை குஷ்பூ ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் கமிங் டூ அமெரிக்கா என்னும் ஆங்கிலத் திரைப்படத்தின் ரீமேக்காகும். சிறந்த நகைச்சுவை திரைப்படம் பல நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது

பல வெற்றிப்படங்கள்
மேலும், கமல்ஹாசனின் வெற்றி விழா திரைப்படத்தை இயக்கியவர் பிரதாப் போத்தன் தான். இந்தப் படத்தில்தான் முதன்முறையாக ஸ்டெடி கேம் என்ற கேமிரா பயன்படுத்தப்பட்டது. அதுமட்டும் இல்லாமல், வில்லனாக மிரட்டி வந்த நெப்போலியனின் சினிமா கேரியரில் திருப்பு முனையாக அமைந்த சீவலப்பேரி பாண்டி படத்தை இயக்கினார். இந்தப் படங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

ரசிகர்கள் இரங்கல்
எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரதாப் போத்தன் இவரது இழப்பு திரையுலகிற்கு ஈடுசெய்ய இழப்பாகும். அவர் இன்று மறைந்திருந்தாலும் அவரின் அழியாத, என்றும் மறக்க முடியாத படங்களின் மூலம் மக்கள் இதயத்தில் என்றும் வாழ்வார். பிரதாப் போத்தன் மறைவுக்கு அவரது திரைப்பிரபலங்கள் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











