பத்ம பூஷன் விருது: தட்டித்தூக்கிய தமிழ் திரைப்பிரபலங்களின் பட்டியல்!
சென்னை: இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது கருதப்படுகிறது. கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு இந்த விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த மதிப்புமிக்க விருது தமிழ் திரையுலகின் பல நட்சத்திரங்களுக்கு அவர்களின் கலைத்திறனுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25ந் தேதி அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
அதில், நடிகரும், கார் ரேசருமான அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து இன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தார். இதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்கான நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்துடன் காலையிலேயே டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
நடிகர் அஜித்குமார்: அஜித் பத்மபூஷன் விருது வாங்கியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இதுவரையில், பத்ம பூஷன் விருது பெற்ற தமிழ் திரைப்பிரபலங்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம். பல நூற்றாண்டுகள் கடந்தாலும் மறையாப் புகழ் கொண்ட மகத்தான நடிகர் சிவாஜி கணேசனுக்கு 1984 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தன் தனித்துவமான ஸ்டைலால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து, ஸ்டைல் மன்னனாக இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 2000 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.

கமல்ஹாசன்: ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். முதல் திரைப்படத்திலேயே சின்ன சின்ன ஆசை பாடலின் மூலம் மக்கள் மனதை கொல்லை அடித்தார். இவர் 2010ம் ஆண்டு பத்ம பூஷன் விருதை பெற்றார். இந்த விருது மட்டுமில்லாமல் ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது என பல விருதுகளை குவித்து இருக்கிறார். அடுத்ததாக 2014 ஆம் ஆண்டு உலக நாயகன் கமலஹாசனுக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது. இந்த விருதை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரானப் முகர்ஜியிடம் இருந்து கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இறந்த பிறகு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. அதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார்.

இந்த முறை 139 பேருக்கு இந்த முறை பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் நடிகர் அஜித், நடிகை ஷோபனா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்த நிலையில், முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமாருக்கு இன்று பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. நடிகர் அஜித் குமார். துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. நடிகர் அஜித் குமார் இந்த உயரிய விருதைப் பெற்றிருப்பது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











