twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனம் கவர்ந்த பரியேறும் பெருமாள்.. கனவை கலைத்த கனா.. தேசிய விருதுகள் தவறவிட்ட தமிழ் படங்கள்!

    |

    சென்னை: தமிழில் பாரம் படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அதே நேரத்தில் தேசிய விருது பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, அதை தவறவிட்ட தமிழ் படங்கள் எவை என தெரிந்து கொள்ளலாம்.

    மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் 66வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த தமிழ் படமாக பாரம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம் படத்தை பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

    List of tamil movies that missed National awards

    சிறந்த நடிகைக்கான விருது கீர்த்தி சுரேஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளராக பத்மாவதி படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலி தேர்வாகியுள்ளார்.

    இந்நிலையில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பல தமிழ் படங்களுக்கு எந்த பிரிவிலும் விருது கிடைக்கவில்லை. அவற்றில் ராஜீவ் மேனன் இயக்கிய சர்வம் தாளமயம், விஷால் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற இரும்புத்திரை, 2.0, சீதக்காதி உள்ளிட்ட படங்களுக்கு விருது வழங்கப்படவில்லை.

    மேலும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், லெனின் பாரதியின் மேற்கு தொடர்ச்சி மலை , ராம்குமாரின் ராட்சசன், பிரேம்குமாரின் 96, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா ஆகிய படங்களும் விருது பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இந்த எந்த படத்துக்கும் விருது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Movies like Pariyerum perumal, 2.0, Irumbuthirai was also on the list of 66th National awards. But none of the movie got awards in any of the category.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X