Karuppu: திரையரங்கையே அதிர வைத்த குட்டி பாப்பா.. ‘கருப்பு’ படம் பார்த்ததும் நடந்த சம்பவம்!

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இந்த படத்தை பார்த்த குட்டி பாபா தியேட்டரிலேயே சாமி ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

'கருப்பு' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள், பின்னணி இசை மற்றும் கிராமத்து தெய்வ கருப்பண்ணா சாமி வரும் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இந்த காட்சியைப் பார்த்த சில உணர்ச்சி மிகுதியால் தியேட்டரிலேயே சாமி ஆடினார்கள். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மேலும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

Karuppu Suriya RJ Balaji
Photo Credit:

சாமியாடிய பாப்பா: இந்த நிலையில், திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த குட்டி சிறுமி ஒருவர் திடீரென உற்சாகத்தில் சாமி ஆடினார். அவரின் தாயார் அந்த குட்டி பாபாவை பிடித்துக்கொண்டு இருக்க கைகளை தூக்கி அந்த இசைக்கு ஏற்றபடி நடனமாடியுள்ளார். இதை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், படத்தின் தாக்கம் குழந்தைகளிடமும் சென்று சேர்ந்திருக்கிறது என்றும் கருப்பு படம் வேற லெவல் என்றும் தியேட்டரே திருவிழா மாதிரி இருக்கு என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.'கருப்பு' படம் சாதாரணமாக கமர்ஷியல் படமாக இல்லாமல், கிராமத்து கலாச்சாரம் மற்றும் உணர்வுகள் வழிபாடுகளை கொண்டு இருப்பதால் மக்கள் எளிதாக கனேக்டாகி விட்டது என கூறி வருகின்றனர்.

Karuppu Suriya RJ Balaji

அதிரடியான வசூல்: மே 15ந் தேதி வெளியான கருப்பு திரைப்படம் முதல் மூன்று நாட்களில் உலக அளவில் ரூ1.47 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து படத்திற்கு மக்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்து வருவதால் படம் நல்ல வசூலை அள்ள வருகிறது. 7வது நாளான நேற்று படம் ரூ 8.3 கோடியை வசூலித்துள்ளது. அதேசமயம் கருப்பு திரைப்படம் உலகளவில் மொத்தம் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X