அஜித்தின் விவேகம் டீசர்... பரபரக்கும் லைவ் கவுன்ட்டவுன் பக்கம்!
இன்னும் சில மணி நேரங்களில் அஜித்தின் விவேகம் படத்தின் முதல் டீசர் இணையதளத்தில் வெளியாகவிருக்கிறது.
டீசரை வெளியிடும் தயாரிப்பாளர் சத்யஜோதி நிறுவனம், இதற்கென யுட்யூபில் லைவ் கவுன்ட்டவுன் பக்கத்தைத் தொடங்கியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் இந்தப் பக்கத்தில்தான் விவேகம் டீசர் வெளியாகவிருக்கிறது.

ஆர்வம் தாங்க முடியாத அஜித் ரசிகர்கள், தங்களின் பரபரப்பை கமெண்டுகள் மூலம் காட்டிவருகின்றனர்.
ஒரு தமிழ்ப் படத்தின் டீசருக்கு இதுபோல லைவ் கவுன்ட்டவுன் பக்கம் தொடங்கப்பட்டிருப்பது அஜித்தின் விவேகத்துக்குத்தான்.
விவேகம் படத்தை சிவா இயக்கியுள்ளார். அஜித்துடன் காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications