சாப்டியானு இனி யார் கேட்பா.. அருவி படப்பிடிப்பில் நடந்த சோகம்.. கலங்கிய லிவிங்ஸ்டன் மகள்!

சென்னை: தன்னை அன்போடும் பாசத்தோடும் பார்த்துக்கொண்ட மேக்கப் பெண் உயிரிழந்தது குறித்து லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அருவி ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் கார்த்திக் வாசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Livingston daughter Jovitha has post an emotional statement on the death of makeup artist Ramaprabha

மேலும் இதில், ஷீலா, சாந்தி வில்லியம்ஸ், எஸ்.டி.பி ரோசரி, டேவிட் சாலமன் ராஜா, மீனா செல்லமுத்து, சுமங்கலி மற்றும் ஸ்ரீ வித்யா சங்கர் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்து வருகின்றனர்.

அருவி சீரியல்: அருவி சீரியலின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று முன்தினம் நடந்த கொண்டு இருந்த போது ஒப்பனைப் பெண் ராமாபிரபாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இரவில் இருந்தே அவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், காலையில் அருவி சீரியலின் படப்பிடிப்பிற்கு வந்துள்ளார்.

திடீர் மணம்: படப்பிடிப்பின் போது மூச்சு திணறல் அதிகரித்ததால், மருத்துவமனைக்கு சென்ற சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். பட்டுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ரமாபிரபாவிற்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவருக்கு இருந்ததால், மகனை சித்தி வளர்த்து வர, இவர் சென்னையில் தங்கிவேலை பார்த்து வந்துள்ளார்.

Livingston daughter Jovitha has post an emotional statement on the death of makeup artist Ramaprabha

போலீசார் விசாரணை: மேக்கப் பெண் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கு அருவி சீரியலில் நடித்த நடிகர் நடிகைகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், இது தற்கொலையா? இல்லை மரணமா? என்ற பல கோணத்தில் விசாரணை நடத்தினர். இதையடுத்து, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு ரமாபிரபாவின் உடல் பட்டுக்கோட்டை கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது

உருக்கமான பதிவு: இந்நிலையில், லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதாவிற்கு மேக்கப் பெண்ணாக இருந்த ரமாபிரபா திடீரென உயிரிழந்தது குறித்த அவர் இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், உன்னைப்போல் அன்பானவள் உயிருடன் இல்லை என்பதை தன்னால் ஜீரணிக்க முடிவில்லை என்றும், சாப்பிடியா என்று இனி என்னை யார் கேட்பார் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X