விவகாரமாக பேசிய விஜய் ரசிகர்.. தரமான பதிலடி கொடுத்த லிவிங்ஸ்டன் மகள்.. இதே வேலையா போச்சு

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்ததிலிருந்து அவரது ரசிகர்களின் செயல்பாடு கடுமையான விமர்சனத்தை சந்தித்துவருகின்றன. அவர்கள் தங்களது நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தாலும் அவர்கள் அதனை கேட்பதாக இல்லை. இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான லிவிங்ஸ்டனின் மகளிடம் விவகாரமாக பேசி வாங்கி கட்டியிருக்கிறார் தவெகவை சேர்ந்த ஒருவர்.

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த பல வருடங்களாகவே கோரிக்கை வைத்தார்கள். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்வகையில் சில வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். அவர் கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக மக்களை நேரில் சந்திக்கும் விதமாக 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் அரசியல் சுற்றுப்பயணத்தையும் ஆரம்பித்தார்.

ரசிகர்களின் செயல்பாடு: இது ஒருபக்கம் இருக்க தவெக கட்சியினரின் செயல்பாடுகள்தான் ரொம்பவே கவலையளிப்பதாக இருக்கின்றன. விக்கிரவாண்டி மாநாடு, மதுரை மாநாடு என கட்டுக்கடங்காமல் கூட்டம் சேர்ந்தது. அப்போது மரங்களில் ஏறுவது, மின் கம்பங்களில் ஏறுவது என பலர் விபரீத செயல்களில் ஈடுபட்டார்கள். திருச்சிக்கு விஜய் வந்தபோதுகூட விமான நிலைய தடுப்புகளை சேதப்படுத்தினார்கள்.

Livingston s Daughter Jovita s Bold Reply to Vijay Fan s Insulting Comment Goes Viral
Photo Credit:

கரூர் துயரம்: இப்படிப்பட்ட சூழலில்தான் சில வாரங்களுக்கு முன்பு கரூருக்கு சென்றார் விஜய். ஆனால் தெரிவிக்கப்பட்ட நேரத்தைவிடவும் மிகவும் தாமதமாக அவர் சென்றதால் அங்கு கூடியிருந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு முழுக்க முழுக்க விஜய்யும், கட்சியினரும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கருத்து.

பக்குவமில்லாதவர்கள்: விஜய் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் அரசியல்படுத்தப்படவே இல்லை; ஒரு நட்சத்திரத்தை நேரில் பார்க்கும் ஆவலில்தான் அவர்கள் கூடுகிறார்கள். அதன் காரணமாகத்தான் கூட்டத்துக்கு வருபவர்கள் இஷ்டத்துக்கு நடந்துகொண்டு சேதாரத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பது மற்ற கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கருத்து. அவர்களது கருத்துப்படிதான் தொண்டர்களின் செயல்பாடும் இருக்கிறது.

தாய்லாந்தில் நடந்த கூத்து: நேற்றுகூட உலக அளவில் பிரபலமான யூடியூபர் டரன் வாட்கின்ஸ் தாய்லாந்து சென்றபோது; அவரது வாகனத்தை பின் தொடர்ந்து சென்று, 'தவெக.. தளபதி விஜய்.. Chief Minister of India' என்று கூறியும், காலணிகளை காருக்குள் வீசியும் அட்ராசிட்டி செய்தார்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டு தீ போல் பரவி; இப்படி பெயரை கெடுக்கிறார்களே என்று கமெண்ட்ஸ்களும் பறந்தன.

லிவிங்ஸ்டன் மகளின் பதிலடி: இந்நிலையில் பிரபல இயக்குநரும், நடிகருமான லிவிங்ஸ்டனின் மகளிடம் வாங்கி கட்டியிருக்கிறார் விஜய் ரசிகர் ஒருவர். அதாவது லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிடா தனது தந்தை தொடர்பாக போஸ்ட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் போட்டிருந்தார். அதன் கமெண்ட்ஸ் செக்‌ஷனில் ஒரு விஜய் ரசிகர் வந்து, 'ஓ இறைவா உங்கள் தந்தை இன்னும் உயிரோடு இருக்கிறாரா?' என்று மோசமாக கேள்வி கேட்டார். அதற்கு ஜோவிடாவோ, 'ஓ.. நீங்களும் உங்கள் குடும்பமும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக அல்லவா நான் நினைத்தேன்' என பதிலடி கொடுத்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இப்படி விவகாரமாக பேசுபவர்களுக்கு இந்த முறையில்தான் பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஜோவிடாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X