காவி வேட்டி, செல்ஃபி, ஸ்டிக்கர்: வேற லெவலில் வச்சு செஞ்ச ஆர்.ஜே. பாலாஜி
சென்னை: எல்.கே.ஜி. பட பாடலை பார்க்கும் போது படம் முழுக்க சிறப்பான, தரமான சம்பவங்கள் இருக்கும் என்று தெரிகிறது.
பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ப்ரியா ஆனந்த், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் எல்.கே.ஜி. அந்த படத்தின் ஒரு போஸ்டரை பார்த்தே பலரும் அதிர்ந்துவிட்டனர்.
இந்நிலையில் தான் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் பாடல் வெளியாகி மேலும் அதிர வைத்துள்ளது.

செல்ஃபி
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் பாடல் அரசியல்வாதிகளை குறி வைத்து தான் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்.ஜே. பாலாஜி காவி வேட்டி கட்டி வருகிறார். மேலும் அவர் செல்ஃபி எடுத்து யாரை நினைவூட்டுகிறார் என்பதை பார்த்தாலே தெரிகிறது.

ஸ்டிக்கர்
பாலாஜியை தானோஸ் போன்று கற்பனை செய்து போஸ்டர் ஒட்டியுள்ளது மரண மாஸ். மேலும் ஸ்டிக்கர் ஒட்டுவது தவறு என்று ஒரு போஸ்டர் வெளியிட்டு அதகளம் செய்துவிட்டார். ஸ்டிக்கர் பிரச்சனை எப்படி வெடிக்கப் போகிறதோ?

பினாமி
A- அரசியல், B- பினாமி, C- கமிஷன் என்று புது விளக்கம் அளித்துள்ள பாலாஜிக்கு கண்டமேனிக்கு எதிர்ப்பு தெரிவித்து படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ப்ரொமோஷன் செலவு மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்
விஜய்யின் சர்கார் படம் போன்று எல்.கே.ஜி.க்கு இலவச விளம்பரம் கிடைக்கலாம். இல்லை என்றால் விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படம் போன்று விளம்பரம் கிடைக்காமலும் போகலாம். நோட்டாவிலும் ஸ்டிக்கர் உள்ளிட்ட சில, பல விஷயங்களை வச்சு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











