தமிழ் ராக்கர்ஸில் எல்.கே.ஜி.: இது என்னடா ஹீரோ ஆர்.ஜே. பாலாஜிக்கு வந்த சோதனை?
சென்னை: எல்.கே.ஜி. படம் வெளியான வேகத்தில் அதை ஆன்லைனில் கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.
ஆர்.ஜே. பாலாஜி எழுதி ஹீரோவாக நடித்த எல்.கே.ஜி. படம் இன்று ரிலீஸானது. அதிகாலை 5 மணி காட்சி எல்லாம் வைத்தார்கள். இந்த ஆளு படத்தின் அதிகாலை காட்சிக்கு யாரு வரப் போகிறார்கள் என்று நினைத்தவர்கள் வியக்கும் வகையில் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

படத்தை பார்த்தவர்களும் ஆஹா, ஓஹோ என்று பாராட்டியுள்ளனர். இந்நிலையில் படம் ரிலீஸான சில மணிநேரத்தில் அதை ஆன்லைனில் கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.
படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்திருப்பதை பார்த்து இன்று இரவு அல்லது வார இறுதி நாட்களில் தியேட்டருக்கு செல்ல நினைத்தவர்கள் கூட தமிழ் ராக்கர்ஸில் படத்தை பார்த்துவிடுவார்கள்.
பாலாஜி பட்ட கஷ்டம் வீணாக தமிழ் ராக்கர்ஸ் காரணமாகியுள்ளது. பாலாஜி படத்தை படுவேகமாக கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.


Click it and Unblock the Notifications











