கோடி கோடியாய் வசூலிக்கும் எல்.கே.ஜி.: இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
Recommended Video

சென்னை: எல்.கே.ஜி. படத்தின் இயக்குநர் பிரபுவுக்கு கார் பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
ஆர்.ஜே. பாலாஜி எழுதி ஹீரோவாக நடித்த எல்.கே.ஜி. படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியானாலும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் இயக்குநர் பிரபுவுக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர்.

பிரபு
எல்.கே.ஜி. படத்தின் சக்சஸ் பார்ட்டி நடந்தது. அப்பொழுது பிரபுவுக்கு ஐசரி கணேஷ் ஹுன்டாய் காரை பரிசளித்துள்ளார். கார் பரிசளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

எல்.கே.ஜி.
எல்.கே.ஜி. படம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் கூட்டம் நிரம்பி வழிகிறது. படம் ரிலீஸான 9 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 14.20 கோடி வசூல் செய்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ரூ. 1 கோடி வசூல் செய்துள்ளது.
பாலாஜி
சன் டிவியின் டாப் 10 மூவீஸ் நிகழ்ச்சியில் எல்.கே.ஜி. படம் முதலிடத்தை பிடித்ததை பார்த்து ஆர்.ஜே. பாலாஜி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
வரவேற்பு
எல்.கே.ஜி. ரிலீஸாகி 2 வாரங்கள் ஆகியும் தமிழகத்தில் மட்டும் அல்ல பெங்களூரிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











