டிவிட்டர் வரலாற்றில்.. தென்னிந்தியாவில் முதல்முறையாக.. ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜிக்கு கிடைத்த பெருமை!

ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி டிவிட்டர் தலைமையகத்தில் இருந்து அறிவிக்கப்பட உள்ளது.

Recommended Video

சர்ச்சையில் ஸ்ருதி ஹாசன் பாடிய டப்பாவ கிழிச்சான் பாடல்- வீடியோ

சென்னை: ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறுது.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்துள்ள படம் எல்கேஜி. கே.ஆர். பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். நாஞ்சில் சம்பத், ஜேகே ரித்திஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

LKG release date to be announced from twitter head quarters

சமகால அரசியலை நையாண்டி செய்யும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 2ம் தேதி சென்னையில் நடைபெற்ற இளையராஜா 75 நிகழ்ச்சியின் போது இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. பசு காவலர்கள், தெர்மாகோல் என தற்போதை அரசியல் டிரெண்டிங்கில் உள்ள எல்லா விஷயங்களையும் சகட்டு மேனிக்கு கலாய்த்திருந்தார்கள். எனவே இந்த டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'டப்பாவ கிழிச்சான்' பாடல் நேற்று வெளியானது. பா.விஜய் வரிகளில் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்பாடலை, ஸ்ருதி ஹாசன் பாடியிருந்தார். டிரெய்லரை போலவே இந்த பாடலும் செம கலாயாக உள்ளது.

இதற்கிடையே எல்கேஜி படத்தில் ரிலீஸ் தேதியை டிவிட்டர் தலைமையகத்தில் இருந்து அறிவிக்க உள்ளனர். ஒரு தென்னிந்தப் படத்தின் ரிலீஸ் தேதி டிவிட்டர் தலைமையகமான ப்ளூ ரூமில் இருந்து அறிவிக்கப்பட உள்ளது இதுதான் முதல் முறையாகும். ஆர்ஜே பாலாஜி படத்திற்கு இப்பெருமை கிடைத்திருப்பதாக அவரது பாலோயர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர்.

மாலை 5.30 மணியளவில் எல்கேஜி படக்குழுவினர் டிவிட்டரில் லைவ் சேட்டிங்கில் வருகிறார்கள். அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளை இப்போதே அனுப்பலாம். டிரெய்லரிலேயே பட்டையை கிளப்பிய ஆர்ஜே பாலாஜி, மெயின் பிக்சரில் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X