LKG Sneak Peak: ஒரேயொரு பிரஸ் மீட்டில் 'தளபதி', ரஜினி இமேஜை டேமேஜ் செய்த பாலாஜி
Recommended Video

சென்னை: எல்.கே.ஜி. படத்தின் ஸ்னீக் பீக்கில் பலரையும் கலாய்த்து அவர்களின் இமேஜை டேமேஜ் செய்துவிட்டார் ஆர்.ஜே. பாலாஜி.
ஆர். ஜே. பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் நாளை வெளியாக உள்ளது. அதிகாலை 5 மணி காட்சி மெரிட்டில் கிடைத்துள்ளது என்று பெருமையுடன் கூறி வருகிறார் பாலாஜி.
இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டிவிட்டுள்ளது.
பாலாஜி
அரசியல்வாதியாகும் ஆர்.ஜே. பாலாஜியை பிரஸ் மீட்டுக்கு அழைத்து வருகிறார் ப்ரியா ஆனந்த். உங்களுக்கு பிடித்த ஸ்வீட் என்ன என்று கேட்டதற்கு பாலாஜி கேசரி என்கிறார். கேசரி, காவி, இந்துத்துவாவா என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார்கள் பத்திரிகையாளர்கள்.

வாரிசு அரசியல்
எங்க அப்பா கேசரி நன்றாக செய்வார் அதனால் பிடிக்கும் என்ற பாலாஜியிடம் அப்பாவா, அப்படி என்றால் வாரிசு அரசியலா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த காட்சி மூலம் பாலாஜி அந்த தளபதியை கலாய்த்திருக்கிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

நடிகர்
அரசியலில் தொப்புக்கடின்னு குதிக்கத் துடிக்கும் நடிகர் ஒருவரையும் இந்த பிரஸ் மீட் காட்சியில் கலாய்த்துள்ளனர். மேலும் ரஜினிகாந்தையும் விட்டு வைக்கவில்லை பாலாஜி. இரண்டு நிமிஷம் எனக்கு தலையெல்லாம் சுத்திருச்சே என்று ரஜினியை விமர்சித்துள்ளார்.

எதிர்பார்ப்பு
ஒரு காட்சியே இப்படி பரபரப்பாக இருக்கிறது என்றால் எல்.கே.ஜி. படம் எப்படி இருக்கும் என்ற பேச்சு ஏற்கனவே துவங்கிவிட்டது. இப்படி மக்களின் ஆர்வத்தை தூண்டிவிடுவதில் பாலாஜி வல்லவர் என்பதை நிரூபித்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











