LKG trailer: தெர்மாகோல், வந்தேரி, மோடி, கமல், விஜய்யை வச்சு செஞ்ச ஆர்.ஜே. பாலாஜி
Recommended Video

சென்னை: பிரதமர் மோடி முதல் அமைச்சர் செல்லூர் ராஜு வரை பல அரசியல்வாதிகளை எல்.கே.ஜி. ட்ரெய்லரில் கலாய்த்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.
புதுமுகம் பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி லால்குடி கருப்பையா காந்தியாக நடித்துள்ள படம் எல்.கே.ஜி. இந்த படத்தின் போஸ்டரே சிறப்பாக, தரமாக இருந்தது.
இந்நிலையில் ட்ரெய்லரை பார்த்து வியக்காதவர்களே இல்லை எனலாம்.
எல்.கே.ஜி.
ட்ரெய்லரில் எடுத்த எடுப்பில் ரூ. 3,000 கோடிக்கு சிலை வைப்பேன் என்று மோடியை கலாய்த்துள்ளார் பாலாஜி. ஒரு மாடு, ஒரு மனுஷன் இரண்டு பேரும் ஆபத்தில் மாட்டியிருக்கும்போது மாட்டை காப்பாற்ற வேண்டுமாம். தெர்மாகோல் முதல் மோடியின் ஃபிட் இந்தியா சவால் வரை பல விஷயங்களையும் வச்சு செஞ்சிருக்கிறார் பாலாஜி.
கண்ணீர்
தலைவரின் புகைப்படத்திற்கு மாலை போட்டு ஒருவர் கண்ணீர் சிந்துவதை பார்த்த பாலாஜியும் கண்ணீர் விடுவது போன்று நடிப்பது சிறப்பு. அந்த தெர்மாகோல் விட்ட காட்சி தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. நீங்க விஞ்ஞானி பாலாஜி.

பினாமி ஆட்சி
ஊழல் ஆட்சி ஒழிக, பினாமி ஆட்சி ஒழிக என்று வரும் காட்சியை பார்ப்பவர்கள் எல்லாம் நேரம், அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்த பாலாஜி எல்லாம் இப்படி பேசுவாரா என்கிறார்கள்.
கமல்
சர்கார் படத்தில் விஜய் ஓட்டு போட்டுவிட்டு வந்து விரலை காட்டியதை கலாய்த்துள்ளார் பாலாஜி. நம்ம ஊர் டிவியில் 100 நாள் ஷோ பண்ணினால் சி.எம்.மே ஆகிடலாம் என்று மயில்சாமி கூறுவது நம்ம கமல் ஹாஸனை பற்றி தான். நீங்க தமிழனே கிடையாது, ஹைதராபாத்தில் இருந்த வந்தேரி தானே என்று பத்திரிகையாளர் ஒருவர் பாலாஜியை பார்த்து கேட்கிறார். அவர் வந்தேரி என்று கூறுவது யாரை என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்.
தமிழர்கள்
கிரிக்கெட் வீரர் அஸ்வின் 10 விக்கெட் எடுத்தால் மீடியாக்கள் அவரை இந்திய வீரர் என்கிறதே தவிர தமிழக வீரர் என்று கூறுவது இல்லை. அதே தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டால் இந்திய மீனவர்கள் என்று கூறாமல் தமிழக மீனவர்கள் என்று கூறுவது ஏன் என்று பாலாஜி கேட்டிருப்பது அருமை. மோடியை கலாய்த்து வரும் காட்சியில் ஐ சேலஞ்ச் காஜல் அகர்வால் என்று சந்தான பாரதி கூறுவது தான் அல்டிமேட்.


Click it and Unblock the Notifications