சிறுமலையில் சிறப்பான கிராமம் செட்... விடுதலை படத்தில் வெற்றிமாறன் செய்த வேற லெவல் விஷயம்!
சிறுமலை : நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியமான கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.
படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிவருகிறார். சிறுமலையில் இந்தப் படத்தின் சூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
படத்திற்காக கலை இயக்குநர் ஜாக்சன் சிறுமலையில் கிராமம் செட்டை அமைத்துள்ளார்.

விடுதலை படம்
நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது விடுதலை. இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் சார்பில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.

விறுவிறு சூட்டிங்
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். அவரது ஒளிப்பதிவில் சிறுமலை உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கால்ஷீட் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக சில மாதங்கள் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. தற்போது அவை தீர்க்கப்பட்டு படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

பிரத்யேகமான கிராமம் செட்
சிறுமலையில் கலை இயக்குநர் ஜாக்சன் இந்தப்படத்திற்காக பிரத்யேகமாக கிராமம் போன்ற செட்டை வடிவமைத்துள்ளார். இதுகுறித்து தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அசுரன், சூரரைப் போற்று முதல் விரைவில் வெளியாகவுள்ள விருமன் வரை அதிகமான படங்களில் பணியாற்றியுள்ளார்.

வரவேற்பை பெற்ற புகைப்படங்கள்
இந்நிலையில் ஜாக்சன் வடிவமைத்துள்ள கிராமத்து செட்டில்தான் தற்போது சூட்டிங் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் விஜய் சேதுபதி கிராமத்து கெட்டப்பில் காணப்பட்டார். அவருக்கு வெற்றிமாறன் காட்சிகளை விளக்கும்வகையில் படங்கள் காணப்பட்டன.

கிராமத்து மக்கள் நடிப்பு
மேலும் விடுதலை படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ மற்றும் சேத்தன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த மக்களையே இயக்குநர் வெற்றிமாறன் நடிக்க வைத்துள்ளாராம். இதில் கிராமத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகளும் நடித்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வாடிவாசல் படத்தில் இணையும் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தை விரைவில் முடித்துவிட்டு சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளார். வாடிவாசல் படம் பல மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிப்பு வெளியாகிய நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டெஸ்ட் சூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு மாடுகளுடன் சூர்யா பயிற்சி
மேலும் இந்தப் படத்திற்காக முன் தயாரிப்பு பணிகள் அதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் படத்தின் சூட்டிங் தாமதமாவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் சூர்யா இந்தப் படத்திற்காக இரண்டு ஜல்லிக்கட்டு மாடுகளை வாங்கி பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











