வெளியே போக முடியலை.. அவரை ரொம்ப மிஸ் பண்றேன்.. இந்த நேரத்தில் ஃபீல் பண்ணும் விஷ்ணு விஷால்!
சென்னை: 21 நாட்கள் லாக் டவுனுக்கு பிறகும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. வரும் மே 3 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Recommended Video
இதனால், வெளியே சகஜமாக மக்களால் செல்லவில்லை, உறவினர்களையும் சந்திக்க முடியவில்லை.
ரத்த சொந்தங்களையும் பார்க்க முடியாமல் இந்த கொரோனா பாதிப்பு பலருக்கும் சோகத்தை தந்துக் கொண்டிருக்கிறது. நடிகர் விஷ்ணு விஷாலும் தனக்கு ரொம்ப பிடித்தவரை காண முடியாமல் மனம் நொந்து போயுள்ளார்.

மோகன் தாஸ்
கொரோனா லாக்டவுன் காரணத்தால், தனது ட்விட்டர் பக்கத்தில் பெயருடன் Stay Home Stay Safe என்ற வாசகத்தையும் நடிகர் விஷ்ணு விஷால் இணைத்துள்ளார். சமீபத்தில் தனது அடுத்த படமான மோகன் தாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தார் விஷ்ணு விஷால்

விவாகரத்துக்கு யார் காரணம்
மேலும், தனது விவாகரத்துக்கு நடிகை அமலா பால் மற்றும் விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டா தான் காரணம் என பலரும் வாய்க்கு வந்தபடி பேசி வருவது, தனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறிய விஷ்ணு விஷால், இருவரும் காரணம் இல்லை; சொந்தப் பிரச்சனை தான் காரணம், அதை நான் வெளிப்படையாக சொல்ல முடியாது என்று மனம் நொறுங்கி பேசி இருந்தார்.
பார்க்க முடியவில்லை
இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த லாக் டவுன் காரணத்தால் தனது செல்ல மகனை பார்க்க முடியாமல் நடிகர் விஷ்ணு விஷால் தவிப்பதாக பதிவிட்டுள்ளார். தனது உயிருக்கு உயிரான மகன் ஆர்யானின் க்யூட் புகைப்படங்களை பதிவிட்டு, மகனை காண ஆவலோடு காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

2 வயசு
விஷ்ணு விஷாலுக்கும் ரஜினி நடராஜுக்கும் கடந்த 2017ம் ஆண்டு ஆர்யான் பிறந்தார். 2 வயதே நிறைவடைந்துள்ள குழந்தை ஆர்யான் மீது விஷ்ணு விஷால் அளவு கடந்த பாசத்தை வைத்துள்ளார். ஆனால், விவாகரத்து காரணமாக மகன் ஆர்யான், தாயுடன் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

லாக் டவுனால்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளும் லாக் டவுன் முறையை அமல்படுத்தி இருக்கின்றன. விஷ்ணு விஷாலை போலவே நடிகர் விஜய்யும் தனது மகன் சஞ்சய் ஜேசனை காண முடியாமல் தவித்து வருகிறார். அதே போல பிருத்விராஜின் மனைவி மற்றும் குழந்தைகள், ஜோர்டானில் சிக்கித் தவித்து வரும் பிருத்விராஜை காண முடியாமல் வேதனையில் வாடுகின்றனர்.

இரண்டாவது திருமணம்
முதல் மனைவி ரஜினி நடராஜுடன் தனக்கு விவாகரத்து ஆனதை ஜனவரி மாதம் வெளியிட்ட சிக்ஸ்பேக் வீடியோ மூலம் வெளிப்படையாக அறிவித்த விஷ்ணு விஷால், தற்போது பேட்மிண்ட வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அண்மையில் ஜூவாலா கட்டா பேட்டி அளித்துள்ளார்.

வெயிட்டிங்கில்
ராட்சசன் படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் படு தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள எஃப்.ஐ.ஆர்., மற்றும் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி உள்ள காடன் படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











