தீவிரமாகும் கொரோனா பரவல்.. கல்யாணத்தை எப்போ நடத்தலாம்? குழப்பத்தில் பிரபல நடிகையின் குடும்பம்!

By

கொச்சி: கொரோனா பரவல் தீவிரமடைந்துவருவதால் திருமணத்தை இப்போது நடத்துவதா, தள்ளி வைப்பதா என்று பிரபல நடிகையின் குடும்பத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.

ஜீவா சங்கர் இயக்கிய அமரகாவியம் படம் மூலம் தமிழுக்கு வந்தவர், மலையாள நடிகை மியா ஜார்ஜ்.

அடுத்து விஷ்ணு விஷால் நடித்த, இன்று நேற்று நாளை, சசிகுமாரின் வெற்றிவேல், தினேஷின், ஒரு நாள் கூத்து, விஜய் ஆண்டனியுடன் எமன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

டிரைவிங் லைசன்ஸ்

டிரைவிங் லைசன்ஸ்

மலையாளத்தில் ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா பின்னர், மோகன்லால், பகத் பாசில் நடித்த ரெட் ஒயின்ஸ், பிருத்விராஜ் நடித்த மெமரீஸ், மோகன்லாலின் மிஸ்டர் பிராடு, மம்மூட்டியின் பரோல், டிரைவிங் லைசன்ஸ் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோருடன் நடித்த 'டிரைவிங் லைசென்ஸ்' படம் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

தமிழில் இப்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் கண்மணிலா, காளிதாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் என நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளன. இந்நிலையில், நடிகை மியா ஜார்ஜுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

நெருங்கிய சொந்தங்கள்

நெருங்கிய சொந்தங்கள்

அஸ்வின் பிலிப் என்பவரை அவர் திருமணம் செய்ய இருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக, நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்கள் திருமணம் செப்டம்பர் மாதம் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அது தள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் கலந்துகொண்டார் மியா.

விளம்பரப் படப்பிடிப்பு

விளம்பரப் படப்பிடிப்பு

அவர் கூறியதாவது: நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்துகொண்டது உற்சாகமாக இருந்தது. அது விளம்பர படப்பிடிப்பு. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகக் கையாண்டு இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்டோம். எவ்வளவு நாள்தான் விஷயங்களை நிறுத்தி வைத்திருக்க முடியும்? வாழ்க்கை தொடர வேண்டும். என் திருமண நிச்சயதார்த்தத்தை எங்கள் குடும்பத்துக்குள் நடத்தி விட்டோம்.

குழப்பத்தில் இருக்கிறோம்

குழப்பத்தில் இருக்கிறோம்

கொரோனா பரவல் நிலைமை மாறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அது தீவிரமடைந்து வருவதால் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது. இதனால் நண்பர்கள், உறவினர்களை அழைத்து பிரமாண்டமாகத் திருமணத்தை நடத்தலாமா? எளிமையாக நடத்தலாமா? முழுமையாக சரியான பிறகு நடத்திக் கொள்ளலாமா என்கிற குழப்பத்தில் இருக்கிறோம்.

லாக்டவுன் உதவி

லாக்டவுன் உதவி

என் வருங்கால கணவருடன் அதிகமாக பேசிக்கொள்ள இந்த லாக்டவுன் உதவி இருக்கிறது. நேரில் இல்லை என்றாலும் போனில் பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறேன். சில மலையாள படங்களும் இருக்கிறது. எப்போது அதன் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று தெரியாது. அது நம் கையிலும் இல்லை. பார்ப்போம். இவ்வாறு நடிகை மியா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X