லாக்டவுனில் செம ஒர்க்கவுட்.. இந்த பாகுபலி நடிகர் எப்படி மாறிட்டாரு பாருங்க.. சிக்ஸ்பேக் சூப்பர்!
பெங்களூரு: கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் கிச்சா சுதீப் தனது சிக்ஸ்பேக் உடம்பை காட்டியபடி எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வைரலாக்கி உள்ளார்.
Recommended Video
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான நான் ஈ படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார் கிச்சா சுதீப்.
இந்த லாக்டவுன் நேரத்தை வீணடிக்காமல், தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் உடம்பை கொண்டு வந்திருக்கிறார்.

கன்னட நடிகர்
கர்நாடகாவின் ஷிமோகாவில் பிறந்த நடிகர் சுதீப் கன்னட டிவி தொடர்களில் அறிமுகமானார். பின்னர் தயாவு எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கிச்சா சுதீப், கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகராக பல படங்களில் நடித்து அசத்தி உள்ளார். ஸ்பர்ஷா, ஹச்சா, நந்தி, கிச்சா உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.

ராஜமவுலி இயக்கத்தில்
2013ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான நான் ஈ படத்தில் சமந்தாவையும் அடையவும், ஒரு ஈயால் அவதி படும் வில்லனாகவும், துப்பாக்கி எடுத்துக் கொண்டு வெறித்தனமாக அதனை சுட்டு சாகடிக்க துடிக்கும் காட்டு மிரண்டியாகவும் நடித்து அசத்தியிருப்பார்.

பாகுபலி நடிகர்
அதிலும், அந்த டவல் சீன் வேற லெவலில் தியேட்டர்கள் திரையில் என்ஜாய் பண்ணினர். பின்னர், மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி முதல் பாகத்தில் கட்டப்பாவுடன் மோதும் காட்சி ஒன்றில் நடித்திருப்பார் நடிகர் சுதீப், இரண்டாம் பாகத்திலும், இவரது உதவி தொடரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது குறிப்பிடத்தக்கது.

கே.எஸ். ரவிக்குமார்
கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த கிச்சா சுதீப், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தமிழில் ஹீரோவாக முடிஞ்சா இவன புடி படத்தில் நடித்திருந்தார். நித்யா மேனன் ஜோடியாக நடித்த அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு கிச்சா சுதீப்புக்கு வெற்றிக் கொடுக்காததால், தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

சிக்ஸ்பேக் சுதீப்
கொரோனா வைரஸ் பாதிப்பால் சினிமாக்காரர்களுக்கு நீண்ட ஒரு ரெஸ்ட் கிடைத்திருக்கிறது. இந்த லாக்டவுன் நேரத்தை பலரும் பல விதமாக பயன்படுத்தி வருகின்றனர். நடிகர் கிச்சா சுதீப், தனது உடலை கட்டுமஸ்த்தாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு சிக்ஸ்பேக் வைத்து அசத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











