For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தாடியும் மீசையும் தாராளமா வளர்க்குறாங்களே.. விஜய் முதல் சந்தானம் வரை.. லாக்டவுன் தந்த மாற்றம்!

  |

  சென்னை: கொரோனா லாக்டவுன் காரணமாக சலூன் கடைகள் எல்லாம் செயல்படாது என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து பல பிரபலங்கள் கட்டிங் ஷேவிங் எல்லாம் பண்ணாமல் தங்களது தாடி, மீசையை எல்லாம் தாராளமா வளர்த்துட்டு வராங்க..

  சிலர் வீட்டிலேயே, சிகை அலங்கார நிபுணர்களாக மாறி, இஷ்டத்துக்கு முடிவெட்டிக் கொண்டு ஹேர்ஸ்டைலை மாற்றியும் வந்தனர்.

  பிரபல நடிகர்களான கமல்ஹாசன், விஜய், விஜய்சேதுபதி, அருண் விஜய், சந்தானம் எல்லாம் இந்த லாக்டவுனில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வேற லுக்கிற்கு மாறியுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன அவற்றை இங்கே பார்ப்போம்..

  ஒன்றா? இரண்டா? என் தமிழை அதிகம் கூவிய ஆண்குயில்.. பாடும் நிலா பாலு.. எஸ்பிபிக்காக உருகும் வைரமுத்து!ஒன்றா? இரண்டா? என் தமிழை அதிகம் கூவிய ஆண்குயில்.. பாடும் நிலா பாலு.. எஸ்பிபிக்காக உருகும் வைரமுத்து!

  கெட்டப் சேஞ்ச் கலைஞன்

  கெட்டப் சேஞ்ச் கலைஞன்

  என்னடா அடிக்கடி கமல் மாதிரி கெட்டப் மாத்துற என தூள் படத்தில் மயில் சாமியை பார்த்து விவேக் காமெடியாக பேசுவார். உலகநாயகன் கமல்ஹாசன் மாதிரி பல கெட்டப்களை மாற்றிய நடிகர் உலகளவிலேயே இல்லை என்றே சொல்லலாம். இந்த லாக்டவுனில் மீசை இல்லாமலும், மீசை தாடியுடனும் சில பல கெட்டப்களை மாற்றி உள்ளார் கமல்ஹாசன். இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் முக்கியமாக பிக்பாஸ் 4க்கு பலரும் வெயிட்டிங் சார்!

  இது எந்த படத்துக்கு

  இது எந்த படத்துக்கு

  மாஸ்டர், லாபம், துக்ளக் தர்பார், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என பல படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கும் நடிகர் விஜய்சேதுபதி விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா, சமந்தா உடன் டூயட் பாட ஸ்லிம்மாக மாறுவார் என்று பார்த்தால், தாத்தா கெட்டப்ல தாடி மீசையை தாராளமாக வளர்த்து ரசிகர்களை திணறடித்துள்ளார். இது எந்த படத்துக்காக சேதுண்ணா!

  கெடா மீசை

  கெடா மீசை

  மாஃபியா படத்தைத் தொடர்ந்து சினம், அக்னிச்சிறகுகள், ஏவி 31, டெக்ஸ்டர் என அருண் விஜய்யை வேறு ஒரு கோணத்திலும் தோற்றத்திலும் ரசிகர்கள் பார்க்க காத்திருக்கும் நிலையில், திடீரென, பட்டி தொட்டியெல்லாம் கலக்கும் விதமகா கெடா மீசையுடன் பேட்ட ரஜினி லுக்கில் நடிகர் அருண் விஜய் இந்த லாக்டவுனில் புதிய தோற்றத்துக்கு மாறியுள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

  TALKING 2 MUCH EP-09 | SPB SHORTFILM ENTRY ! | FILMIBEAT TAMIL
  சியான் விக்ரமா சந்தானமா

  சியான் விக்ரமா சந்தானமா

  ஹர்பஜன் சிங்குடன் சேர்ந்து டிக்கிலோனா ஆட உள்ள சந்தானம், தனியாக பாகுபலி, 300 பருத்தி வீரர்கள் படத்தை எல்லாம் கலாய்த்து பிஸ்கோத்தாகவும் சமீபத்தில் வெளியான டிரைலரில் அசத்தினார். இந்நிலையில், இந்த லாக்டவுனில் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்த்தால், திடீரென சியான் விக்ரம் போல, நீண்ட முடியுடனும் தாடியுடனும் வேற ஒரு லுக்கில் தரிசனம் தந்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

  சூப்பர் கூல் மாஸ்டர்

  சூப்பர் கூல் மாஸ்டர்

  மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பார்த்த நடிகர் விஜய், தற்போது நண்பன் விஜய்க்கு தாடி மீசை வளர்ந்தது போன்ற லுக்கில் சூப்பர் கூலாக இருக்கிறார். நட்புக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்து வரும் தளபதி விஜய், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிய புகைப்படம் வெளியாகி அவரது லாக்டவுன் லுக்கையும் வெளிப்படுத்தி விட்டது. தீபாவளிக்கு புள்ளிங்களாம் அட்டெண்டன்ஸ் போட ரெடி.. வாத்தி ரெய்டு வருமா?

  English summary
  Kamal Haasan, Vijay, Vijay Sethupathi, Arun Vijay and Santhanam top 5 Kollywood actors who changed their look in the lockdown period.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X