ஆண் நண்பருடன் லாக்டவுனை கொண்டாடும் ஸ்ருதிஹாசன்.. ஓப்பனாக ஸ்டேட்மென்ட் வெளியிட்டு அலப்பறை!
சென்னை: இந்த லாக்டவுனை தனது பாய் பெஸ்டியுடன் இணைந்து கழிக்கப் போவதாக நடிகை ஸ்ருதிஹாசன் ஓப்பன் ஸ்டேட்மென்ட் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக தனது இஎம்ஐ பில்களை தானே தான் கட்ட வேண்டும் என்றும், அம்மாவும் அப்பாவும் அதற்கு உதவ மாட்டார்கள் என பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.
இந்நிலையில், ஸ்ருதிஹாசனின் இந்த லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

கஷ்டப்படுறேன்
பொங்கலுக்கு வெளியான கிராக், விஜய்சேதுபதியின் லாபம், பிரபாஸின் சலார் என வரிசைக் கட்டி நடித்து வரும் ஸ்ருதிஹாசன் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுவதாகவும், இந்த லாக்டவுன் காலத்திலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் எனக் கூறியதை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

பாய் பெஸ்ட்டியுடன் லாக்டவுன்
சாந்தனு ஹசாரிகா எனும் மும்பையை சேர்ந்த இலுஸ்டிரேட்டரை காதலித்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் இந்த லாக்டவுனை பாய் பெஸ்ட்டியுடன் தான் கழிக்கப் போகிறேன் என தற்போது ஒரு இன்ஸ்டா பதிவை போட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

டூ பைத்தியம்ஸ்
சாந்தனு ஹசாரிகாவின் கன்னத்தை கிள்ளியும் தலையில் கொம்பு வைத்தும், செல்பிக்கு உம்மா கொடுத்தும் அலப்பறை செய்துள்ள செல்பி போட்டோக்களின் சங்கமத்தை பதிவிட்டுள்ள ஸ்ருதிஹாசன் டூ பைத்தியம்ஸ் என்றும் ஹாஷ்டேக் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தமன்னா கமெண்ட்
காதலருடன் மும்பையில் தனது பிறந்தநாளை நடிகை ஸ்ருதிஹாசன் கொண்டாடும் போது அந்த பார்ட்டியில் கலந்து கொண்டு ஸ்ருதியை வாழ்த்திய நடிகை தமன்னா, ஸ்ருதிஹாசனின் இந்த பதிவுக்கு லைக் போட்டு க்யூட்டீஸ் என்றும் கமெண்ட் செய்துள்ளார்.

இப்போ இது தேவையா
சன்னி லியோன், ரவீணா டாண்டன், பிரியங்கா சோப்ரா, ஹூமா குரேஷி, டாப்சி, அமைரா தஸ்தூர், ஷ்ரத்தா ஸ்ரீநாத் என ஏகப்பட்ட நடிகைகள் தங்களால் முயன்ற கொரோனா நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாய் பெஸ்ட்டியுடன் நீங்கள் செய்யும் காதல் லீலைகளை பதிவிட வேண்டுமா என்று சில நெட்டிசன்கள் விளாசி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











