தனுஷ் வாழ்த்துடன் ட்விட்டரில் வெளியிட்ட லாக்கப் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் 'லாக்கப்' படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்து இருக்கிறார். லாக்அப் படக்குழுவினருக்கு தனது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார் தனுஷ். போஸ்டர் வழக்கத்தை விட மாறுபட்டதாகவே இருந்தது. கம்பிகளுக்கு உள்ளே ஒரு முனையில் வைபவ்வும் மற்றொரு புறம் தலைகீழாக வெங்கட் பிரபுவும் உள்ளனர். இந்த மாறுபட்ட முதல் பார்வை படத்தின் மீதுள்ள ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது .

Lockup movie First look poster released by Actor Dhanush

தெலுங்கு இயக்குனர் கொடன்டராமி ரெட்டியின் மகனான வைபவ், வெங்கட் பிரபுவின் 'சரோஜா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் வாய்ப்புகள் சரியாக அமையாத காரணத்தால் தமிழ் சினிமாவிலேயே அதிக படியான படங்களில் நடித்து உள்ளார். இவர் பல படங்களில் கௌரவ வேடங்களில் நடித்திருக்கிறார். வைபவ் நடித்த 'மேயாத மான்' திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைந்தது. அதை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து நான்கிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக லாக்கப் படத்தில் நடிக்கும் வாணி போஜன் 'மீக்கு மாத்ரமே செப்தா' எனும் தெலுங்கு படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். அந்த படம் நவம்பர்1 ரிலீஸாகி உள்ளது. இதில் 'பெல்லீ சூப்லு' பட இயக்குனர் தருண் பாஸ்கர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'அர்ஜீன் ரெட்டி' ஹீரோவான விஜய் தேவர்கொண்டா தயாரிப்பில் படத்தை இயக்கியுள்ளார் சமீர் சுல்தான். இந்த படம் நவம்பர் 1 ரிலீஸாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு தமிழில் 'ஓ மை கடவுளே' படத்தில் அசோக் செல்வனுடன் நடித்து வருகிறார் வாணி போஜன்.

நித்தின் சத்யா 'சென்னை28' படங்களின் மூலம் பிரபலமானவர். அதற்கு பிறகு பல படங்களிலும் நடித்துள்ளார். ஜெய் நடித்த 'ஜருகண்டி' படத்தை தயாரித்தார். அதனை தொடர்ந்து 'லாக்கப்' படத்தை தயாரித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கிய இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார் ஆரோல் கொரலி. படத்தில் வைபவ், வாணி போஜன் உடன் ஷம்னா கசிம், காலா பட புகழ் ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். வெங்கட் பிரபு முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வைபவ் மற்றும் வெங்கட் பிரபு மட்டும் தான் முதல் பார்வையில் இருக்கின்றனர். இதன் மூலம் வெங்கட் பிரபு படத்தின் வில்லனாக இருக்க கூட வாய்ப்பு இருக்கிறது என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். படத்தை பற்றின மேலும் பல தகவல்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

படத்தின் பர்ஸ்ட் லுக் மிகவும் வித்யாசமாக இருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X