வைபவ் வாணிபோஜனின் லாக்கப் டீசர் வெளியாக போகிறது ,நிதின் சத்யா மகிழ்ச்சி

சென்னை : வைபவ் சரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இவர் தெழுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார் . இவர் பல தமிழ் படங்களில் கௌரவ வேடங்களில் நடித்திருக்கிறார் ,வைபவ் நடித்த மேயாதா மான் திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைந்தது . அதை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து நான்கிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

வாணி போஜன் 'மீக்கு மாத்ரமே செப்தா' எனும் படத்தில் நடித்திருந்தார். இதில் 'பெல்லீ சூப்லு' பட இயக்குனர் தருன் பாஸ்கர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தயாரித்திருந்தார் அர்ஜுன் ரெட்டி ஹீரோவான 'விஜய் தேவரகொன்டா' . இந்த படத்தை இயக்கியிருந்தார் சமீர் சுல்தான் .

lockup movie teaser been planned to release.

இந்த படம் தான் வாணி போஜன் அறிமுகமாகும் முதல் படம் .இந்த படம் நவம்பர் 1 ரிலீஸாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்திற்கு பிறகு தமிழில் ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனுடன் நடித்து வருகிறார் வாணி.

லாக்கப் படத்தை நித்தின் சத்யா தயாரிக்கிறார் . நித்தின் சத்யா சென்னை28 படங்களின் மூலம் நமக்கெல்லாம் அறிமுகமானவர் ,அதற்கு பிறகு பல படங்களில் நடித்திருப்பார். இவர் லாக்கப் படத்தை தயாரிக்கும் முன்னரறே ஜெய்யின் ஜருகண்டி படத்தை தயாரித்து இருந்தார் அந்த படத்திற்கு பிறகு லாக்கப் படத்தை தயாரித்து வருகிறார். படத்தை இயக்குகிறார் எஸ்.ஜி.சார்லஸ் ,படத்திற்கு இசை அமைத்து வருகிறார் ஆரோல் கொரலி. படத்தில் வைபவ், வாணி போஜன் உடன் ஷம்னா கசிம்,ஈஸ்வரி ராவ் மற்றும் வெங்கட் பிரபு முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

lockup movie teaser been planned to release.

தற்போது லாக்கப் படத்தின் டீசர் நவம்பர் 12 ரிலீஸாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது .சரியாக மாலை 5 மனிக்கு டீசர் வெளியாகும் என வாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . பட போஸ்டர்களில் வெங்கட் பிரபு பெயர் வைபவின் பெயர் பக்கத்தில் இருப்பதை பார்த்தால் நீண்ட நாட்களுக்கு பிறகு வெங்கட் பிரபு ஒரு முழு நீல கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது உருதியாகியுள்ளது . டீசர் வெளிவந்ததும் மேலும் சில தகவல்கள் கிடைக்கலாம் காத்திருப்போம்.

லாக்கப் இளைஞர்களின் மனதை லாக் செய்யுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X