twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்னும் 7ஆம் அறிவே முடியல.. அதுக்குள்ள காப்பானா.. இது 2020ஆ இல்ல 2012ஆ? #Locustsattack

    |

    சென்னை: 2020ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை ஏகப்பட்ட பிரச்சனைகள் இந்த உலகத்திற்கும் மனித இனத்திற்கும் வந்து கொண்டே இருக்கிறது.

    Recommended Video

    Locust வெட்டுக்கிளிகள் என்பது என்ன தெரியுமா? | Oneindia Tamil

    கொரோனா எனும் கொடிய வைரஸ் கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தொடங்கி இந்த ஆண்டு ஒட்டுமொத்த உலகிற்கும் பரவி கிட்டத்தட்ட 50 லட்சம் மக்களை பாதித்துள்ளது.

    இதில், கொடுமையான விஷயம் என்னவென்றால், சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அந்த நோய்க்கு பலியாகி உள்ளனர்.

    நயன்தாரா கிட்ட இருக்க ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல தொகுப்பாளினி!நயன்தாரா கிட்ட இருக்க ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல தொகுப்பாளினி!

    வெட்டுக்கிளி அட்டகாசம்

    இந்நிலையில், இந்தியாவிற்கு அடுத்த ஒரு பெரிய இயற்கை பேரிடராக சமீபத்தில் வந்த ஆம்பன் புயல் வட மாநிலங்களை ஒரு காட்டு காட்டியது. இந்நிலையில், தற்போது அடுத்த ஒரு புதிய பூகம்பம் வெட்டுக்கிளி உருவத்தில் உருவாகி இருக்கிறது. #Locustsattack என்ற ஹாஷ்டேக்கில் வட இந்தியா மீது படையெடுத்துள்ள புதிய பிரச்சனை டிரெண்டாகி வருகிறது.

    கொரோனாவும் 7ஆம் அறிவும்

    கொரோனாவும் 7ஆம் அறிவும்

    சீனாவில் இருந்து நடத்தப்படும் பயோ வார் தாக்குதலாகவே அமெரிக்க உள்ள பல்வேறு நாடுகள் இந்த கொரோனா நோய் தொற்றை காண்கின்றனர். சைனீஸ் வைரஸ் என்ற பெயரும் சூட்டப்பட்டு இருந்தது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 7ஆம் அறிவு படத்தின் கதையை போலவே இது இருக்கிறதே என பல மீம்கள் சமூக வலைதளங்களில் பறந்தன.

    காப்பானும் வெட்டுக்கிளியும்

    காப்பானும் வெட்டுக்கிளியும்

    இந்நிலையில், அடுத்த ஒரு சூர்யா படமும் லைவ்வில் நடைபெற்று வருவது போல ரசிகர்கள் உணர்கின்றனர். காப்பான் படத்தில் சீலிபெரா எனும் வெட்டுக்கிளியை வேண்டும் என்றே தொழிலதிபரும் காப்பான் படத்தின் வில்லனுமான பொம்மன் இரானி குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பி பயிர்களை நாசம் செய்வார்.

    நம்பவில்லை

    அதிலிருந்து நாட்டை காப்பாற்ற சூர்யா பல முயற்சிகளை செய்து அனைத்து சீலிபெரா பூச்சிகளையும் அழிப்பார். ஆனால், அந்த படத்தில் எந்தவொரு லாஜிக்கும் இல்லை. இதெல்லாம் நம்பும்படியாகவே இருக்கிறது என நினைத்த ரசிகர்களால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இந்நிலையில், தற்போது அனைவரின் கவனத்தையும் காப்பான் திரைப்படம் பெற்றிருக்கிறது.

    அந்த விளையாட்டை நிறுத்துங்க

    ராஜஸ்தான் மாநிலத்தில் சாரை சாரையாய் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளை பார்க்கவே கொலையே நடுங்குகிறது. இந்த வெட்டுக்கிளியின் கோர பசிக்கு பல்லாயிரக் கணக்கான பயிர்கள் நாசம் ஆகின்றன. இதனை பார்த்த சில நெட்டிசன்கள் ஜூமான்ஜி படத்தில் வரும் விளையாட்டை யாராவது விளையாடுனீங்கனா தயவு செய்து நிறுத்தங்க எனக் கோரியுள்ளார்.

    இலுமினாட்டி சதி

    இலுமினாட்டி சதி

    மேலும், சிலர் பைபிளில் வருவதை போலவே ஒரு வைரஸ் உலகை அழிக்கும் என்றும் அதனை தொடர்ந்து வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள் பயிர்களை நாசம் செய்யும் என்ற விவரங்கள் பைபிளில் இருப்பதாகவும், இலுமினாட்டிகளின் சதியால் தான் தற்போது இதெல்லாம் நடக்கிறது என்றும் சில நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். கிறிஸ்டியன் பேல் நடித்த எக்ஸோடஸ் படத்திலும் இது போன்ற பூச்சிகளின் அட்டகாசத்தை காட்சி படுத்தியிருப்பர்.

    2020ஆ இல்ல 2012ஆ?

    2020ஆ இல்ல 2012ஆ?

    2012ல் உலகம் அழிந்துவிடும் என மாயன் காலண்டரில் எழுதப்பட்டிருப்பதை பலரும் நம்பியிருந்தனர். கடந்த 2009ம் ஆண்டு ரோலண்ட் எமரிச் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான 2012 படத்தை பார்த்த பலரும், இதே போலத் தான் உலகம் அழியப் போகிறது என நினைத்தனர். ஆனால், 2012 அமைதியாக கடந்தது. தற்போது தான் 2012 போல இருக்கிறது என பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

    இதுவும் கடந்து போகும்

    இதுவும் கடந்து போகும்

    தானோஸை போல ஒரு சொடக்கில் பாதி உலகத்தையே அழித்தாலும் நல்ல மனங்கள் எனும் அவெஞ்சர்ஸ்களின் முயற்சியால், மீண்டும் இந்த உலகம் பழையபடி அழகாக ஜனிக்கும். கொரோனா கலவரத்தின் போது, உதவிக்கரம் நீட்டிய பல உன்னத உயிர்கள் இந்த உலகில் இருக்கும் வரை எந்த பிரச்சனை வந்தாலும், இதுவும் கடந்து போகும் என்றே நம்பிக்கையோடு வாழலாம்.

    Read more about: coronavirus cyclone
    English summary
    Locusts attack connects Suriya’s Kaappan movie to fans. Earlier, 7aam Arivu movie was connected to the Coronavirus pandemic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X